Monday, September 27, 2010

கிலாஃபா ஒரே தீர்வு

இஸ்லாமிய அரசான கிலாஃபாவானது, முஸ்தஃபா கமாலின் சீரிய முயற்சியின் மூலம்வீழ்த்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு,
இஸ்லாத்தின் தலைமையகமாக இருந்து உலகினை ஆட்டிப்படைத்த துருக்கி இப்பொழுது ஒரு சாதாரண பால்கன்நாடாக வீழ்ந்து விட்டது.
என தி டைம்ஸ்நாளிதழ், மார்ச் 1924ல் குறிப்பிட்டது. அந்த வீழ்ச்சியின் பின்பு வேறுஎந்த முயற்சியும் செய்யாமல் காத்திருந்த முஸ்லிம் உம்மா, இன்று அதன் விளைவுகளைசந்தித்து வருகிறது.
பால்கன் (Balcan)நாடுகளான போஸ்னியா, கொஸோவோ ஆகிய நாடுகளில் முஸ்லிம்பெண்கள் கொடுமைக்காளாக்கப்பட்டு இழிவுபடுத்தப்படுவதை பொறுக்க முடியாமல் மரங்களில்து}க்கில் தொங்கிய காட்சியை என்னவென்பது. விளை நிலங்களில் விதைகட்குப்பதிலாகமுஸ்லிம்களின் உடல்கள் புதைக்கப்பட்ட ஸெரிபரேனியாவை மறந்துவிடமுடியுமா? இவைஅனைத்தும், முஸ்லிம்களை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்ட ஐ.நா. படைகளின் நயவஞ்சகவார்த்தையில் ஏமாந்த முஸ்லிம்கட்கு இழைக்கப்பட்ட கொடுமைகளாகும்.
பால்கன் தேசத்தை இஸ்லாமிய தேசமாக்கிய சுல்தான் முராத் அவர்களின் வழி வந்தோர்மிக அருகிலுள்ள வளைகுடாப் பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பொழுதும் அவர்கள்பாராமுகமாக இருப்பது, சுல்தான் முராத் அவர்களை மட்டுமன்றி, இஸ்லாத்தையேஇழிவுபடுத்துவாகவே உள்ளது. போர்வைகளையும், உணவுப் பொட்டலங்களையும், குர்ஆனையும்அனுப்புவோர், எதிரிகளிடமிருந்து முஸ்லிம்களின் உயிர்களை காக்கின்ற போர்ப்படையினைகட்டிவைத்துவிட்டது ஏனோ?
பொருளாதாரத் தடையின் மூலம் ஈராக் நாட்டில் லட்சக்கணக்கான குழந்தைகள்இறந்தபோதும் இவ்வுலகம் பாராமுகமாக இருந்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றபோர்வையில் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் எண்ணற்ற அப்பாவி முஸ்லிம்கள் கொன்றுகுவிக்கப்படும் போதும் எவரும் கேட்பாரில்லை.
இந்நிலையில், உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவருமே பாதுகாப்பற்ற ஒரு நிலையிலேயேஉள்ளனர். இஸ்லாத்தின் எதிரிகட்கு அவர்கள் வெகு எளிதாக இரையாவதை உணரமுடிகிறது.பாலஸ்தீன், ஈராக், போஸ்னியா, ஆப்கானிஸ்தான், செசன்யா, கொசோவோ, காஷ்மீர்,சோமாலியா, குஜராத் என உதாரணங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.முஸ்லிம்களையும் அவர்களது நம்பிக்கையான இஸ்லாமையும் கேலிக்கும் கொடுமைக்கும்ஆளாக்குகின்றனர்.
சமீபத்தில் நபிகளாரைப் பற்றிய கேலிச்சித்திரத்தை ஐரோப்பாவின்நாளிதழ்கள் வெளியிட்டது, அமெரிக்க ராணுவம் குர்ஆனை இழிவுபடுத்தியது, இதைப்போன்ற பலநிகழ்ச்சிகள். அபு க்ராயிப் சிறையில் முஸ்லிம்கள் அனுபவித்த, அனுபவிக்கின்ற கொடுமைகள்,பிரான்சு தேசம் எடுக்கின்ற ஹிஜாப் அணிதலுக்கு எதிரான நடவடிக்கை என நாளுக்கு நாள்,இஸ்லாத்திற்கும், முஸ்லிம்கட்கும் எதிரான காழ்ப்புணர்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இந்த நிலையிலும், இஸ்லாமிய நிலங்களை ஆட்சிசெய்கின்றோர் எவ்வித நடவடிக்கையும்எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கிலாஃபாவின் வீழ்ச்சிக்குப் பிறகு நாளடைவில் முஸ்லிம்களின் மனதில் ஒருவித விரக்திதோன்றியிருக்கிறது. அவர்களின் நம்பிக்கையும் சிறிது சிறிதாக வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது.இன்றைய இஸ்லாமிய உலகானது, ஒற்றுமையின்மை, பாதுகாப்பின்மை, வீழ்ச்சி போன்றவற்றில்சிக்கி, ஒரு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. உலக அரங்கில் இந்த நாடுகள் ஒருபொருட்டாக மதிக்கப்படவில்லை. எதிரிகளின் ஆதிக்கத்தில் கீழடங்கி இரண்டாம்நிலைநாடுகளாக வீழ்ந்தே கிடக்கின்றன. அதற்கும் ஒருபடி மேலாக அங்கு ஆட்சிப்பொறுப்பில்இருப்பவர்களும் எதிரிகட்கு கீழ்ப்படிந்து, இஸ்லாத்தை ஒதுக்கிவைத்து, அதனை எதிர்த்துப்போராடும் முஸ்லிம்களை கொடுமைக்குள்ளாக்குகின்றனர்.இந்தப் பரிதாப நிலையில் ஒவ்வொரு முஸ்லிமின் மனதிலும் சில முக்கிய கேள்விகள்எழுவது இயற்கையே.
ஏன் இந்த இஸ்லாமிய சமுதாயம் பின்தங்கிய நிலையிலுள்ளது?
இஸ்லாமிய நிலங்களை ஆள்வோர் கொடுமைக்காரர்களாக இருக்கின்றனர். எந்தவிதவிசாரணையுமின்றி ஆயிரமாயிரம் முஸ்லிம்களை சிறைப்பிடிக்கக் காரணம் என்ன?இத்தகைய ஒடுக்கப்பட்ட சூழ்நிலையிலும் முஸ்லிம் உம்மாவிடையே ஒற்றுமையை காணஇயலவில்லை. முஸ்லிம் சமுதாயமானது ஒருவித குழப்ப நிலையிலும், வலுவிழந்தும்காணப்படுகிறது. உதாரணமாக, தமது எண்ணை வளம் மூலம் எரிசக்தியையும், அதன்விளைவான பொருளாதார சக்தியையும் உலகின் வளர்ந்த நாடுகள் அனைத்திற்கும் வழங்குகின்றவளைகுடா நாடுகள், உலக அரங்கில் இரண்டாம்பட்ச நாடுகளாகவே கருதப்படுகின்றன.கோடிக்கோடியாக வருமானம் வருகின்ற பொழுதும், சிங்கப்பூர், கொரியா போலதொழிற்மயமாக்கப்பட்ட நாடாக ஆகாதது எதனால்? இத்தனை பணமும் எங்கே செல்கிறது?பூமியிலிருந்து கிடைக்கும் வளங்கள் முஸ்லிம் உம்மாவிற்கே சொந்தம் என நபிகளார்குறிப்பிட்டுள்ளார்கள். முஸ்லிம் உம்மாவின் நன்மைக்காகவே அவை செலவிடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இங்கே என்ன நடக்கிறது? ஏழை மக்களின் பசியைப் போக்கவோ, நாட்டைதொழிற்மயமாக்கவோ, ஆராய்ச்சிக் கூடங்கள் அமைக்கவோ, இராணுவ பலத்தை பெருக்கவோஇந்த செல்வம் பயன்படுத்தப்படவில்லை. அனைத்திற்கும் வளைகுடா நாடுகள் மேற்குலகிடமேகையேந்துகிறது. தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் முஸ்லிம் மக்கள் மீதுகுண்டுமழை பொழிந்த போதிலும் அந்த நாடுகள் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு, ஒன்றும்செய்ய இயலாமல் கையைப் பிசைந்து கொண்டு நின்றது. முஸ்லிம் நாடுகள் இப்படிஒற்றுமையின்றி பின்தங்கியிருப்பது எதனால்?
சூடான் நாட்டின் மக்கள் வளமும், விவசாய சக்தியும், சவூதி அரேபியாவின் பண பலமும்இணைந்து முஸ்லிம் உம்மாவின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்ற ஒரு சிறந்தவிவசாயத்துறையை உருவாக்கியிருக்கவேண்டும். எகிப்திய தொழிற்துறை அறிவு நேர்த்தியும்,வளைகுடா நாடுகளின் செல்வமும் இணைந்து தொழிற்துறையில் மேற்குலகைமிஞ்சியிருக்கவேண்டும். அங்குள்ள மக்கள் வளத்தால் ஒரு சிறந்த படை உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். இதுபோல எத்தனையோ. ஆனால் எதுவுமே நடைபெறவில்லை. மார்க்கம், பண்டையவரலாறு, மொழி, சிந்தனை என எல்லாவற்றிலும் ஒற்றுமை இருந்தும், இந்த முஸ்லிம் உம்மாபிளவுபட்டுநிற்பதேன். எல்லாவற்றையும் சுருக்கி ஒரே வரியில் கூறுவதென்றால்,நபிகளார் மூலம் வழிகாட்டப்பட்ட இந்த இஸ்லாமிய சமுதாயம் இன்று மிகவும் பலவீனமாக இருப்பதேன்?
முஸ்லிம்களின் பலவீனமான நிலை இயல்பானது அன்று. மேலும் நிச்சயமாக நமதுநிலைக்கு இஸ்லாம் காரணமன்று. மாறாக முஸ்லிம்களின் இன்றைய நிலைக்கு காரணம், நாம்இஸ்லாத்தை பின்பற்றத் தவறியதேயாகும். நாம் ஒவ்வொருவரும் தனிநபராக முஸ்லிமாகஇருந்தபோதும், மொத்தத்தில் நமது சமுதாயத்தில் இஸ்லாம் இல்லை.இன்றைய முஸ்லிம் சமுதாயம் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றவில்லை. வாழ்வின்கொள்கைகள், சட்டதிட்டங்கள், சிந்தனைகள், அனைத்திலும் இஸ்லாம் அல்லாத ஒருகண்ணோட்டமே நிறைந்துள்ளது. இஸ்லாத்திற்கு விசுவாசமன்றி ஜஹிலியாவை(அறியாமை)விசுவாசிக்கிறோம். முதலாளித்துவம், மக்களாட்சி, தேசியவாதம், சுயலாபம் போன்றவைமுஸ்லிம்களின் மனதில் ஆழப் பதிந்துவிட்டன. அவை முஸ்லிம்களின் மனதிலிருந்து இஸ்லாத்தைதுரத்திவிட்டன. முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படையில் சிந்திப்பதை விட்டும் விலகிமேற்குலகின் கொள்கைகளின் அடிப்படையில் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.
1924ல் கிலாஃபாஅரசு வீழ்ந்த பிறகு இஸ்லாமிய சட்டங்களும் இவ்வுலகை விட்டும் மறைந்துவிட்டன. இறைவன்கட்டளையிட்டுள்ள ஷாP, வாழ்வை விட்டும் மறைந்துவிட்டது. இதுவே நமது பலவீனத்திற்கும்,பின்தங்கிய நிலைக்கும் காரணமாயிற்று.கிலாஃபாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, இஸ்லாமிய நிலங்கள், இங்கிலாந்து, பிரான்சு போன்றநாடுகளின் காலனி ஆதிக்கத்திற்குள்ளாயின. அதன் மூலம் அந்த ஐரோப்பிய நாடுகள் தங்களின்முதலாளித்துவக் கொள்கையை மெதுமெதுவாக அனைத்துத் துறைகளிலும் புகுத்தின. முடிவில்இஸ்லாமிய நிலங்கள் அனைத்தும் மேற்கத்திய முதலாளித்துவக் கொள்கையின்அடிப்படையிலேயே ஆட்சிசெய்யப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் நாட்டின் மிக முக்கியபொறுப்புகளை வகித்த மேற்கத்தியப் பிரதிநிதிகள், நாகரிகமயமாக்கல் என்ற போர்வையில், (மீடியா) வாயிலாக, முஸ்லிம் சமுதாயத்தில், மேற்கத்திய கொள்கைகளைதிணித்தனர்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால் காலனி ஆதிக்க நாடுகட்கு பின்னடைவுஏற்பட்டது. போருக்கான பெரும் பொருட் செலவை சமாளிக்க வேண்டி வந்தது, மேலும்,சோவியத் யூனியன், அமெரிக்கா ஆகிய நாடுகள் காலனி ஏகாதிபத்யத்திற்கு கடும் எதிர்ப்புத்தெரிவிக்கலாயின. அதனால் ஆதிக்க நாடுகள் தமது காலனி நாடுகட்கு விடுதலை அளித்துஅவற்றை விட்டும் வெளியேறின.
இவ்வாறாக சுதந்திரம் பெற்ற நாடுகள் புதிய தலைமுறைஆட்சியாளர்களின் கீழ் வந்தன. அவர்கள் முந்தைய காலனி ஆதிக்க நாடுகளின்பிரதிநிதிகளாகவே செயல்பட்டனர். அதன் மூலம் காலனி ஆதிக்க நாடுகளால் தமது மறைமுகஆட்சியை தொடரமுடிந்தது.தமது நாட்டை சீர்திருத்துவதாகவும், முன்னேற்றப்பாதையில் செலுத்துவதாகவும் கூறி,இந்த ஆட்சியாளர்கள், இஸ்லாத்தை விலக்கி மற்ற அனைத்துக் கோட்பாடுகளையும்அரவணைத்துச் சென்றனர். ஆனால் அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியது.
அதாவதுஊழலும், அடக்குமுறையும் வியாபித்தன. அந்நாடுகள் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துவதில்மட்டுமே வெற்றி கண்டன. அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள், மேலும் மேலும்,இஸ்லாத்தின் எதிரிகளை சார்ந்திருக்கும்படியே அமைந்தன.மொத்தத்தில், அத்தகைய இஸ்லாம் அல்லாத மதச்சார்பற்ற கொள்கைகள் முஸ்லிம்களைமேற்கத்திய மற்றும் கம்யூனிஸ்ட் நாடுகளின் அடிமைகளாகவே மாற்றின.
ஆதிக்க நாடுகட்குஎதிரான சுதந்திரப் போராட்டத்தில், மக்களை ஒன்று சேர்த்து இயக்கிய ஒரு சக்திஇஸ்லாமேயாகும். இருந்தபோதிலும் சுதந்திரம் அடைந்த பின்பு, அதற்காகப் பாடுபட்டமுஸ்லிம்கள் நிராகரிக்கப்பட்டு, மதச்சார்பற்ற, காலனி ஆதிக்க நாடுகளின் கைப்பாவைகள்ஆட்சியில் அமர்ந்தனர். பாகிஸ்தான், துனிசியா, அல்ஜீரியா, எகிப்து போன்ற நாடுகளில் இந்தநிலையைக் காணலாம். ஆனாலும் முஸ்லிம்கள் தமது போராட்டத்தை கைவிடவில்லை.முன்னேற்றப்பாதையில் செலுத்துவதாகக் கூறிக்கொண்ட ஆட்சியாளர்கள் தங்கள் முயற்சியில்தோல்வியுற்றதை இந்த முஸ்லிம்கள் மக்களிடைய எடுத்துரைத்தவண்ணம் உள்ளனர். இந்தமுஸ்லிம்கள் மதச்சார்பற்ற ஆட்சியாளர்களின் அரசியல் கொள்கைகளை எதிர்த்துப் போராடி,முஸ்லிம் உம்மாவிற்கெதிரான சூழ்ச்சியைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையேஏற்படுத்தியவண்ணம் உள்ளனர்.
இஸ்லாம் அல்லாத பிற கொள்கைகளின் தோல்வியைக் கண்ணாரக் காண்கின்றமுஸ்லிம்கள், தமது பின்னடைவிற்கு ஒரே நிவாரணியாக இஸ்லாம் மட்டுமே இருக்கமுடியும் எனஉணரலாயினர். அதனால் கடந்த இருபதாண்டுகளில், உலகிலுள்ள முஸ்லிம்கள் இஸ்லாத்தின்பக்கம் திரும்பலாயினர். அரேபியர்கள், துருக்கியர்கள், பாகிஸ்தானியர்கள், ஆப்பிரிக்கர்கள் எனபல்வேறு பிரிவுகளாக பிளவுண்டுகிடந்தோர், முஸ்லிம்கள் என உணர்ந்து, இஸ்லாத்தின்சட்டதிட்டங்களை கற்றறிய ஆரம்பித்தனர். அதன் விளைவாக சமூகம், நாடு மற்றும் தனிமனிதஒழுக்க நெறிகளை முறைப்படுத்த, இஸ்லாமிய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஒருபோராட்டத்தில் இறங்கினர். அந்தப் போராளிகளின் மன உறுதியும், அவர்கள் எடுத்துறைக்கும்கொள்கைகளும், அரியணைகளையே ஆட்டம்காணச் செய்தன.
அச்செய்தியானது இஸ்லாமியநிலங்களை ஆள்வோரிடையே மட்டுமன்றி, மேற்குலக அரசுகளின் மத்தியிலும் ஒரு அச்சத்தைஉண்டுபண்ணியது. எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்லாத்தை மீண்டும் மலரச் செய்ய முடியும்என்ற புதிய செய்தியை, நம்பிக்கையை, அனைத்து முஸ்லிம்கள் மனதிலும் ஏற்படுத்தியது. நமதுபிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில்புரிந்துகொண்டு, அந்தத் தீர்வை நபிகளாரின் பாதையில் சரியானபடி செயல்படுத்த நாமும் ஒருமுக்கியப்பங்காற்ற வேண்டும் என்பதே இன்றைய அவசியத் தேவையாகும்.


 அத்தகைய தீர்வினை நமது வாழ்வில்நடைமுறைப்படுத்துவதும், நாம் அல்லாஹ்(சுபு)வினை வணங்குவதேயாகும். முஸ்லிம்கள்,வாழ்வின் அனைத்து துறைகளிலும் இஸ்லாமை நடைமுறைப்படுத்தியிருந்த பொழுது, இஸ்லாமியசமுதாயம், உலகின் மேலோங்கிய சமுதாயமாகத் திகழ்ந்தது. எப்பொழுது இஸ்லாத்தின்மீதிருந்த பிடி தளர்ந்ததோ, அப்பொழுதே, சிறந்த அரசாகவும், மேலோங்கிய சமுதாயமாகவும்விளங்கிய முஸ்லிம்களின் மேலாண்மையும் சிறிதுசிறிதாகத் தளர்ந்தது. இன்று, இஸ்லாம்,வாழ்க்கையினின்றும் மறைந்து, மசூதிகளில் மட்டுமே கடைபிடிக்கப்படுவதாயிற்று. அதனால்முஸ்லிம்கள் வீழ்ந்து, பின்தங்கி, இழிநிலைக்கு ஆட்பட்டு, எதிரிகட்கு எளிதாக இரையாவதைகண்கூடாகக் காண முடிகிறது.
இஸ்லாத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதன் சட்ட திட்டங்களை, தனி மனித அளவில்மட்டுமன்றி, சமூகம், அரசு என எல்லா மட்டத்திலும் செயல்படுத்தினால் மட்டுமே முஸ்லிம்கள்மறுமலர்ச்சியடைய முடியும். நம்பிக்கை கொள்ளுதல்என்ற அளவில் நிறுத்திவிடாமல்,’நடைமுறைப் படுத்துதல்என்பதையும் இணைத்தாலன்றி முஸ்லிம்கள் முன்னேற முடியாது.அல்லாஹ்(சுபு)வின் அருளைப் பெற்று மேலோங்கிய சமூகமாகத் திகழ இவ்விரண்டும் இணையவேண்டும். இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொள்ளும் மக்கள், இஸ்லாம் அல்லாத பிறசட்டதிட்டங்களையே நிறைவேற்றுவதால், முஸ்லிம்கள் தொடர்ந்து நலிந்து, ஏமாற்றப்பட்டேஇருக்கின்றனர். யாராலும் அசைக்கமுடியாதவாறு இருந்த இஸ்லாமிய அரசினை ஒருவிதஅச்சத்தோடு பார்த்த எதிரிகள், இன்று தமது கைப்பாவைகளின் உதவியுடன் செயல்படுத்தும்அடக்குமுறையின் மூலம், இஸ்லாத்திற்கு மாறான ஒரு ஆட்சியமைப்பை உருவாக்கி,முஸ்லிம்களின் வளங்களை சுரண்டி, முஸ்லிம்களை அடிமைப்படுத்தி, இஸ்லாத்தையே பின்பற்றமுடியாமல் செய்துவிட்டனர்.
இவை எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு, இறைவன் அருளியுள்ளபடியான ஒரு இஸ்லாமியஆட்சியை, அதாவது கிலாஃபாவை நிலைநிறுத்துவதேயாகும். இஸ்லாமிய நிலங்களை ஆளும்இன்றைய கைப்பாவை அரசுகளை து}க்கி எறிந்து, கிலாஃபாவை நிலைநாட்டுவது இன்றையமுக்கியத் தேவை மட்டுமன்றி அல்லாஹ்(சுபு) நமக்கு இட்டுள்ள கட்டளையுமாகும்.
கிலாஃபா என்பது என்ன?
இஸ்லாமிய ஆட்சிமுறைக்கு இடப்பட்டுள்ள பெயர் கிலாஃபா ஆகும். அல்லாஹ்(சுபு)அருளியுள்ள ஷாPஆ சட்டதிட்டங்களை அமல் செய்து இஸ்லாத்தை உலகின் மற்ற பகுதிகட்கும்ஏந்திச் செல்கின்ற ஒரு அமைப்பே கிலாஃபா ஆகும். இது உலகளாவிய முறையில், முஸ்லிம்கள்அனைவருக்குமான தலைமைத்துவமும், இஸ்லாமிய ஆட்சி முறையுமாகும்.கிலாஃபா என்பது இமாராஹ் எனவும் அழைக்கப்படும். இரண்டும் ஒரே பொருளைக்குறிக்கின்ற வௌ;வேறு வார்த்தைகளாம். இதனை விளக்குகின்ற ஏராளமான ஹதீத்கள்உள்ளன. வௌ;வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இரண்டும் ஒன்றையே குறிக்கும்,அதாவது அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களைக்கொண்டு ஆட்சிபுரிவது என்பதே அது.
கிலாஃபா ஆட்சியில் வாழ்வது ஒரு முஸ்லிமிற்கு கட்டாயக்கடமை(ஃபர்த்)ஆகும்.
கிலாஃபா ஆட்சியில் மட்டுமே இஸ்லாமிய சட்டப்படி நாம் நடக்கமுடியும் என்பதால்கிலாஃபா ஆட்சியல் வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கட்டாயக் கடமையாகும். அதன்படிஅத்தகைய கிலாஃபா இல்லாத சமயத்தில் அதனை நிலைநாட்டுவதும் ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் ஃபர்த் ஆகும். தொழுகையைப் பேணுவது எவ்வளவு முக்கியமோ அதைப்போலவேகிலாஃபாவை நிலைநாட்டுவதும் அதிமுக்கியக் கடமையாகும். இந்த கடமையிலிருந்து எவரும்ஒதுங்கிக்கொள்ள முடியாது. அவ்வாறு ஒதுங்கிக்கொள்பவர்கள், அல்லாஹ்(சுபு)வின்கேள்விகணக்கிற்கு பதில் சொல்லியே தீரவேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனைஉண்டு என்பதை விளக்குகின்ற குர்ஆனிய வசனங்களும் ஹதீத்களும் ஏராளமாக உள்ளன.
கிலாஃபாவை நிலைநாட்டுவது கடமை என்பதற்கான ஆதாரங்கள் குர்ஆனிலும்,நபிகளாரின்(ஸல்) சுன்னாவிலும், சஹாபாக்களின் ஒருங்கிணைந்த தீர்விலும் (இஜ்மா-அஸ்-ஸஹாபா) காணப்படுகிறது.
சுன்னாவிலிருந்து ஆதாரம்
முஸ்லிம் உம்மாவின் நலன்களை பாதுகாக்க ஒரு இஸ்லாமிய அரசும், அதன் ஒரே ஒருபிரதிநியும் இருக்கவேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதையும், அத்தகைய அரசு இல்லாவிடில்அதனை நிறுவுவது முஸ்லிம் உம்மா மீது ஃபர்த்(கடமை) ஆக்கப்பட்டுள்ளது என்பதையும்ஹதீஸ்கள் மூலமும் விளங்கிக்கொள்ளலாம்.அப்துல்லா இப்ன் உமர் அறிவிப்பதாக நஃபிஅ குறிப்பிடுவிடுதாக முஸ்லிமில்பதியப்பட்டுள்ளது.
நபிகளார் கூறுகிறார்கள்: அல்லாவின் பாதையில் பைஆ செய்பவர் மறுமை நாளில் எந்தஆதாரமும் தேவையின்றி இறைவன் முன் தோன்றுவர். ஆனால் பைஆ(சத்தியப்பிரமாணம்)செய்யாத நிலையில் மரணிப்பவரோ ஜஹிலிய மரணமடைபவராவர்.ஒவ்வொரு முஸ்லிமும் கலீஃபாவிற்கு பைஆ(சத்தியப்பிரமாணம்) கொடுத்திருக்க வேண்டும்.அவ்வாறான பைஆ கொடுக்காத நிலையில் யாரேனும் மரணித்தால் அவர் ஜஹிலிய மரணத்தையேதழுவுவர். ஜஹிலிய மரணம் என்பது காஃபிராக மரணிப்பதன்று மாறாக ஜஹிலிய மரணமென்பதுஇஸ்லாம் தன்னை வந்தடைவதற்கு முன் மரணிப்பதாகும். பைஆ என்பது கலீஃபாவிற்கு மட்டுமேகொடுக்கப்படுகிறது. அத்தகைய பைஆ கண்டிப்பாக ஒவ்வொரு முஸ்லிமும் செய்திருக்கவேண்டும் என்பதை நபிகளார் ஃபர்த்(கட்டாயக் கடமை) ஆக்கியுள்ளார்கள்.இந்த ஹதீஸில் கலீஃபாவிற்கு பைஆ கொடுப்பதுதான் ஃபர்த்எனக் கூறப்படவில்லை.மாறாக ஒவ்வொருவரும் பைஆ செய்திருக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. எனவேஒவ்வொருவரும் பைஆ செய்திருக்க வேண்டுமென்றால் கலீஃபாவும் இருக்கவேண்டும் என்பதுஃபர்த் ஆகிறது. கலீஃபா இல்லாத நிலையில் அவரை நியமிக்க வேண்டும் என்பதும்கடமையாகிறது.
அபுஹ_ரைரா(ரழி) அறிவித்ததாக ஹிஸான்-இப்ன்-உர்வா (ரழி) நபிகளார்(ஸல்) கூறியதாககுறிப்பிடுகிறார்கள்.
எனது மறைவிற்குப் பிறகு உங்களை நிர்வகிக்க பிரதிநிதிகள்(கலீஃபாக்கள்) தோன்றுவர். இறைவிசுவாசமுள்ள பிரதிநிதி அவ்விசுவாசத்துடன் வழிநடத்துவார். இறைவிசுவாசமற்ற ஒருவரும்அதன்படி வழி நடத்துவார். அவர்களது கட்டளைகள் உண்மையைச் சார்ந்திருந்தால் அதனையேபின்பற்றுங்கள். அவர்கள் உண்மையுடன் நடந்தால் அது உங்கட்கு நன்மையாக அமையும்.அவர்கள் தீங்கு செய்தாலோ அது அவர்கட்கெதிராகவே கணக்கிடப்படும்.
நபிகளார்(ஸல்) கூறியதாக அபுஹ_ரைரா (ரழி) அறிவித்ததாக முஸ்லிமில்பதியப்பட்டுள்ளதாவது.
இமாம் ஒரு கேடயம் ஆவார். அவர் பின் நின்றே நீங்கள் போராட வேண்டும். அவர் மூலமாகவேநீங்கள் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டும்.
அபுஹாசிம் அறிவிப்பதாக முஸ்லிமில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
நான் அபுஹ_ரைராவுடன் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் அடிக்கடி சொல்லியரசூலுல்லாவின்(ஸல்) கூற்று: நபிமார்கள் மக்கள் நலன்களை பேணிக்காத்தனர். ஒரு நபியின்மறைவிற்குப்பின்னர் வேறு நபிகள் தோன்றினர். ஆனால் எனது மறைவிற்குப்பின்னர் வேறு நபியாரும் வருவாரிலர், ஆனால் அதிகமாக கலீஃபாக்கள் தோன்றுவர்.”"
நபிகளார்(ஸல்) கூறியதாக இப்ன் அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்.
உம்மாவின் அமீர் தமக்கு விருப்பமல்லாத செயலை செய்வதாக ஒருவர் கருதினால் அவர்பொறுமையுடன் இருக்கவேண்டும். எவர் ஒருவர் ஒரு கைப்பிடி அளவேனும் இமாமை விட்டுபிரிந்து செல்கிறாறோ அவர் அடைவது ஜஹிலிய மரணமேயாகும்.
மேற்கண்ட ஹதீஸ்களினின்று முஸ்லிம் உம்மாவின் நலன்களை பாதுகாக்க,அல்லாஹ்(சுபு)விற்கு அடிபணிந்து நடக்கும் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதுதெளிவாகிறது. மேலும் அத்தகைய இமாம் முஸ்லிம் உம்மாவின் கேடயம் எனக்குறிப்பிடப்பட்டதிலிருந்து இமாம் இருப்பதன் அவசியம் விளங்கிக்கொள்ளப்படுகிறது. இமாம் அன்றிமுஸ்லிம் உம்மாவிற்குப் பாதுகாவல் இல்லை. எனவே இமாம் இருப்பது ஃபர்த் ஆகிறது.அல்லாஹ்(சுபு) நபிகளாருக்கு(ஸல்) கட்டளையிடுகையில் ஒரு செயலினால் ஏற்படும்கெட்ட விளைவுகளை கூறினால் அது தடுக்கப்படவேண்டிய ஹராம் என அறிந்து கொள்ளலாம்.அதே போல அத்தகைய செயல் இஸ்லாத்தின் கட்டளைகளை நிறைவேற்ற தேவையாகஇருந்தாலோ அல்லது அத்தகைய செயலன்றி இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த முடியாமல்போனாலோ அச்செயல் ஃபர்த் ஆகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதாவது இஸ்லாமிய நலன்களைநிறைவேற்றுவது குலஃபா(கலீஃபாக்கள்) மட்டுமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அத்தகையகுலஃபா இருப்பது கடமையாகிறது. மேலும் கலீஃபாவிடமிருந்து ஒரு கைப்பிடியளவேனும் பிரிவதுஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே கலீஃபா இருப்பது ஃபர்த் ஆகிறது.
நபிகளார்(ஸல்) கூறியதாக அப்துல்லா-இப்ன்-அப்ரு (ரழி) அறிவித்ததாக புஹாரியிலுள்ள கூற்று.
தங்களுக்குள் ஒரு அமீரை நியமிக்காமல் மூன்று பேர் இருப்பது தடுக்கப்பட்டுள்ளது.
நபிகளார்(ஸல்) கூறியதாக சையீத் அறிவித்ததாக இமாம் அபு தாவூத் கூறுகிறார்கள்.
மூன்று பேர் பயணம் புறப்பட்டால் அவர்களிடையே ஒரு அமீரை நியமிக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம் உம்மாவிற்கு அமீர் ஒருவர் இருப்பதுஅவசியமாகிறது. மூன்று பேருக்கே ஒரு அமீர் நியமிக்க வேண்டியது ஃபர்த் எனில் இந்த முஸ்லிம்உம்மாவிற்கு ஒரு அமீரை நியமிப்பது எவ்வளவு பெரிய ஃபர்த் என்பதை தெரிந்து கொள்ளலாம்.மேலும் அமீர் தங்களிடையே ஒருவர்என்பதால் அவர் ஒருவரேஎனவும் முஸ்லிம்எனவும்அறிந்து கொள்ளலாம்.
இஜ்மா-அஸ்-ஸஹாபாவினின்று கிலாஃபா என்பது ஃபர்த் என்பதற்கானசான்று
இஸ்லாமிய சட்டங்களின் ஆதாரங்கட்கு குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றை அடுத்துசஹாபாக்களின் இஜ்மா(ஒருங்கிணைந்த தீர்வு) ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இஜ்மா-அஸ்-ஸஹாபாவின் கருத்துப்படி அனைத்து ஸஹாபாக்களும் நபிகளாரின்(ஸல்) மறைவிற்குப்பின்னர்,ஒரு கலீஃபாவை நியமிக்க ஒப்புக்கொண்டனர். அதன்படியே அபுபக்கர்(ரலி) முதல் கலீஃபாஆனார். அவரது மறைவிற்குப் பின்னர் உமர்(ரலி), பின்னர் உத்மான்(ரலி) ஆகியோரும்கலீஃபாக்களாக ஆக அனைத்து சஹாபாக்களும் ஒப்புக்கொண்டனர். கலீஃபாவை நியமிப்பது ஒருமுக்கியக்கடமை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.
நபிகளாரின்(ஸல்) மறைவிற்குப்பின்னரோஅல்லது மற்ற கலீஃபாக்களின் மறைவிற்குப்பின்னரோ, யார் கலீஃபாவாக வரவேண்டும் என்பதில்கருத்து வேறுபாடு இருந்தாலும், கலீஃபா ஒருவர் இருப்பது ஃபர்த் என்பதில் அனைத்துசஹாபாக்களும் உறுதியுடனிருந்தனர். இதன் மூலம் கலீஃபா ஒருவர் இருப்பது கடமைஎன்பதற்கு இஜ்மா-அஸ்-ஸஹாபாவும் சான்றளிக்கிறது.கலீஃபாவை நியமித்து அவருக்கு பைஆ கொடுப்பது எவ்வளவு முக்கியக் கடமைஎன்பதை நபிகளார்(ஸல்) அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் சஹாபாக்கள் நடந்துகொண்ட விதத்தினின்றும் அறியலாம். முஸ்லிம் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலை
எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அடக்கம் செய்வது இறந்தவரைச்சுற்றியுள்ளோருக்கு ஃபர்த் ஆகும். அதைவிடுத்து உடலை அடக்கம் செய்யாமல் வேறுவேலைகளில் ஈடுபடுவது ஹராம் ஆகும். எனவே சஹாபாக்கள் முதலில் நபிகளாரின்(ஸல்)உடலை அடக்கம் செய்வதிலேயே ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் சில சஹாபாக்கள்நபிகளாரின்(ஸல்) உடலை அடக்கம் செய்வதை விட்டு, ஒரு கலீஃபாவை, முஸ்லிம் உம்மாவின்தலைவரை நியமிக்கும் பணியில் ஈடுபட்டனர். இறந்த உடலை அடக்கம் செய்யாமல் வேறுவேலைகளில் ஈடுபடுவது ஹராம் ஆதலால் மற்ற சஹாபாக்கள் அதனை எதிர்த்திருக்க வேண்டும்.ஹராமாக்கப்பட்ட எதனையும் எதிர்க்கும் உறுதியுள்ள சஹாபாக்கள், அடக்கம் செய்யப்படுவது தாமதமாவதை எதிர்க்காமல் கலீஃபாவை நியமிக்க முனையும் சஹாபாக்கட்கு ஆதரவாகஅமைதிகாத்தனர். ஒரு குறிப்பில் நபிகளார்(ஸல்) திங்கட்கிழமை இறந்ததாகவும், அடுத்த நாள்அபுபக்கர்(ரலி) கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் புதன் கிழமையே நபிகளாரின் உடல் அடக்கம் தகனம் செய்யப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இமாம் மாலிக் அவர்களது குறிப்பில்அபுபக்கர்(ரலி) தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செவ்வாய்கிழமையே அடக்கம் செய்யப்பட்டதாககுறிப்பிடப்பட்டுள்ளது. அபுபக்கர்(ரலி) கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர் ஆற்றியசொற்பொழிவு அனைவரும் அறிந்ததே. அதன்பிறகே நபிகளாரின்(ஸல்) உடலை குளிப்பாட்டும்பணி தொடங்கியது. அதன்பிறகு எங்கு அடக்கம் செய்வது எனப் பிரச்சனை எழுந்தபோதுகலீஃபாவாகிய அபுபக்கர்(ரலி) அவர்களின் முடிவுப்படி நபிகளார் இறந்த இடத்திலேயே அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது.நபிகளாரின் உடலை அடக்கம் செய்வதையும் விட, முஸ்லிம்கட்கு ஒரு பிரதிநிதியைநியமிப்பது ஒரு முக்கியக் கடமையாகக் கருதிய சஹாபாக்கள் அனைவரும் அதன்படிசெயல்பட்டனர். இதன்படி ஒரு கலீஃபாவை நியமிப்பது முஸ்லிம்கட்கு ஒரு முக்கியக்கடமைஎன்பதை அறிந்து கொள்ளலாம்.


ஷரிஆ கொள்கை
நமது தீனை நிலைநாட்டி, அனைத்துத் துறைகளிலும் இறைச்சட்டங்களைநடைமுறைப்படுத்தவேண்டும் என்பது இஸ்லாமிய ஆதாரங்களினின்றும் தெளிவாக அறியப்பட்டஒன்று. ஆனால் அத்தகைய சட்டங்களை நிலைநாட்டும் அதிகாரம் படைத்த ஒரு ஆட்சியாளர்இன்றி அத்தகைய சட்டங்களை செயல்படுத்தி, பாதுகாக்க முடியாது. ஷரிஆவின் கருத்துப்படிஒரு வாஜிபை கடைபிடிப்பதற்காக செய்யவேண்டிய அனைத்து செயல்களும் வாஜிபாகும்.எனவே கலீஃபா எனும் தலைவர் ஒருவர் இன்றி எந்த ஷரிஆ சட்டத்தையும் நிலைநாட்டமுடியாது என்பதால் கலீஃபா ஒருவர் இருப்பது நமக்கு ஃபர்த் ஆகும். அதேபோல கலீஃபாஇல்லாவிடில் அந்த கலீஃபாவை நியமிப்பதும் அல்லது அத்தகைய நியமனத்திற்காக முயற்சிசெய்வதும் நமக்கு ஃபர்த் ஆகும்.ஷரிஆவை வாழ்வின் சகல துறைகளிலும் செயல்படவைப்பது கட்டாயம்என்பதற்கான குர்ஆனிய ஆதாரங்கள்கிலாஃபாவை நிலைநாட்டி அல்லாஹ்(சுபு) அருளிய சட்டதிட்டங்களைக் கொண்டு ஆட்சிபுரியும் ஒரு அரசின் கீழ் வாழ்வது முஸ்லிம்களுக்கு ஃபர்த்(கட்டாயக் கடமை) என்பதற்கானஆதாரங்கள் குர்ஆனில் ஏராளமாக உள்ளன.
அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக.உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்றவேண்டாம். “(5:48)
அல்லாஹ்(சுபு) தான் அருளியவற்றைக் கொண்டே மக்களிடையே தீர்ப்பளிக்குமாறுநபிகளாரிடம் கட்டளையிடுகிறான். அதன் மூலம் ஒவ்வொரு முஸ்லிமையும் அந்தச் சட்டங்களையேபின்பற்றுமாறு பணிக்கிறான். நபிகளாருக்கு(ஸல்) இடப்பட்ட கட்டளையானது, நபிகளாரை மட்டும்குறிப்பிடும்படியான சொற்பதம் இல்லாவிடில் அனைத்து முஸ்லிம்கட்கும் இடப்பட்டகட்டளையாகும். இந்தக் குர்ஆன் வசனத்தில் அத்தகைய கட்டளை எதுவும் இல்லை ஆதலால்இது அனைத்து முஸ்லிம்கட்கும் இடப்பட்ட கட்டளையாகும். இறைச் சட்டங்களை நிறைவேற்றகலீஃபா ஒருவர் இருப்பது அவசியமாகிறது.இந்த வசனத்தில் வரும் மாஎனும் வார்த்தையானது பொதுவாக அனைத்தையும்குறிக்கும். இதன் மூலம் வாழ்வின் அனைத்து சந்தர்பங்களிலும் அல்லாஹ்(சுபு)வின் கட்டளையைநடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தெளிவு. மேலும் இவ்வசனம் இரு வேறு அர்த்தம்கொள்ளும் படியான விதத்தில் அமையவில்லை. இது ஒரே பொருள் கொள்ளக்கூடியஆணித்தரமான வசனமாகும்.
அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை.”( 12:40)
அதிகாரம் அனைத்தும் அல்லாவிற்கே எனக் கூறும் இக்குர்ஆன் வசனத்தில் அதிகாரம்என்பது மனித சமுதாயத்தின் அனைத்து துறைகளுக்கமான
{க்ம்” (சட்டமியற்றுதல்) ஆகும்.எனவே வாழ்வின் அனைத்து விசயங்களிலும், தனிமனிதனையோ அல்லது சமுதாயத்தையோகட்டுப்படுத்த செயல்படுத்தப்படும் சட்டதிட்டமானது அல்லாஹ்(சுபு)விடமிருந்து மட்டுமேபெறப்படவேண்டும். இதுவே தவ்ஹீதின் அம்சம். மேலும் அல்லாஹ்(சுபு)வே அல்-ஹாக்கிம்(நீதியாளன்) ஆவான்.
எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள்நிச்சயமாக காஃபிர்கள்தாம். (5:44)
எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோநிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே. (5:45)
அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோஅவர்கள் தான்பாவிகளாவார்கள்.” ( 5:47)
அல்லாஹ்(சுபு) அருளியவற்றைக்கொண்டும் நிர்வகிக்காதவர்காஃபிர்,அநியாயக்காரர்(தாலிம்), பாவிகள்(ஃபாசிக்)என அல்லாஹ்(சுபு) கூறுகிறான். இதிலும் மாஎனும் வார்த்தை உள்ளது. இது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் குறிக்கும். எனவேநாட்டை ஆள்வதோ, சமுதாயத்தை நிர்வகிப்பதோ, தனி மனித நடவடிக்கைகளைசெயல்படுத்துவதோ எதுவுமே அல்லாஹ்(சுபு) அருளியபடியே அமைய வேண்டும். ஆதலால்அத்தகைய அமைப்பான கிலாஃபா இருப்பதும் அவசியமாகும்.
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்)து}தருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில்ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும்,இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்)
து}தரிடமும்ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாகஇருக்கும்.” (4:59)
இவ் வசனத்தில் அல்லாஹ்(சுபு) நபிகளாருக்கு(ஸல்) அடுத்தபடியாக அதிகாரத்தில்மேலுள்ளோருக்கு கட்டுப்படும்படி கட்டளையிட்டுள்ளான். எனவே அத்தகைய அதிகாரம் படைத்தஒருவர் (ஆட்சியாளர்) முஸ்லிம் உம்மாவிடையே இருப்பது அவசியமாகிறது. வாழ்க்கையில்,நடைமுறையில் இல்லாத ஒருவருக்கு கட்டுப்படும்படி ஒருபோதும் அல்லாஹ்(சுபு) கூறவதில்லை.எனவே ஆத்தகைய ஆட்சியாளர் இருப்பதும், இல்லாவிடில் அத்தகைய ஒருவரை ஏற்படுத்துவதும்முஸ்லிம் உம்மா மீது கடமையாகிறது.இங்கு அதிகாரத்தில் மேலுள்ள ஆட்சியாளர்என்பது அல்லாஹ்(சுபு) அருளியசட்டதிட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்பவர் என்பதே பொருளாகும். அவர் மூலமாகவேஇஸ்லாமிய சட்டதிட்டங்களை அமல் செய்ய முடியும்.
அஸஸ்(ரலி) அறிவித்ததாக அஹ்மத்குறிப்பிடுகிறார்கள்.
நபிகளார்(ஸல்) கூறுகிறார்கள் : அல்லாஹ்விற்கு கட்டுப்படாதோர்க்கு கட்டுப்படுதல் இல்லை.
இஸ்லாத்தில் ஆட்சியமைப்பு முறை இல்லை எனக் கூறுவோரின் கூற்றுக்கு மாறாக,முஸ்லிம் உம்மாவிடையே எப்பொழுதும் அல்லாஹ்(சுபு) அருளிய சட்டதிட்டங்களைக அமல்செய்யும் ஒரு பிரதிநிதி இருக்கவேண்டியது ஃபர்த் (கட்டாயக் கடமை) என்பதையே இவ்வசனம்குறிப்பிடுகிறது.
உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மைநீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம்மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள்நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.”(4:65)
இஸ்லாமிய முறைப்படியான கிலாஃபா அரசு இல்லாவிட்டால் இறைவன் அருளியபடிதீர்பளிப்பது(சட்டங்களை நிறைவேற்றுவது) நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. இஸ்லாம்ஒரு முழுமையான மார்க்கம் எனக் கொண்டால் இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றுவதும்அதனை நிறைவேற்றும் ஒரு கிலாஃபா அரசு இருப்பதும் அவசியமாகிறது.ஒரு இஸ்லாமிய அரசு இருந்தால் மட்டுமே மேற்படி ஆதாரங்கள் பொருந்தும். அப்படிஇல்லாவிடில் இந்த ஆதாரங்கள் பொருந்தாது. இன்றைய அரசியல் சமுதாய அமைப்பினைஏற்றுக்கொள்ளலாம்”" எனக் கூறுவோரும் உண்டு.
ஆனால் அத்தகைய நிபந்தனை எதுவும்மேற்படி எந்த வசனத்திலும் இல்லை. எனவே கலீஃபா ஒருவரும் கிலாஃபா எனும் இஸ்லாமியஆட்சியமைப்பும் இருப்பது ஃபர்த் ஆகும். ஃபர்த் ஆன காரியம் செய்ய மேற்கொள்ளப்படும்ஒவ்வொரு முயற்சியும் ஃபர்த் ஆகும்.உதாரணம் தொழுகைக்காக ஒது(ளு) செய்தல். ஆதலால்கிலாஃபா இல்லாத நேரத்தில் அதனை உருவாக்க முனைவதும் ஃபர்த் ஆகும்.கலீஃபாவை நியமிப்பதற்கான காலக் கெடுவும், அந்தக் கடமையைநிறைவேற்றத் தவறுவதன் விளைவுகளும்கலீஃபாவிற்கு கொடுக்கப்பட்ட பைஆ (சத்தியப்பிரமாணம்) இல்லாமல் இரண்டு இரவுகட்குமேல் இருப்பது ஒரு முஸ்லிமிற்கு ஹராம் ஆகும். இஜ்மா-அஸ்-ஸஹாபா (சஹாபாக்களின்ஒருங்கிணைந்த தீர்வு) மூலம் இதற்கான ஆதாரத்தை அறியலாம்.
நபிகளார் மறைந்த செய்தியைக் கேட்ட சஹாபாக்கள், பனு சாயிதாவின் இடத்தில் கூடி,முஸ்லிம்கட்கு அடுத்த பிரதிநிதியை நியமிப்பதற்காக விவாதித்தனர். இந்த விவாதத்தின்போதுநபிகளாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை. இரண்டு நாட்களாக இந்த விவாதம்தொடர்ந்தது. அடுத்த நாளில் அபுபக்கர்(ரலி) அவர்களுக்கு அனைவரும் பைஆ கொடுத்தனர்.பைஆ கொடுத்ததன் பிற்பாடே அவர்கள் நபிகளாரின் உடல் அடக்கத்திற்கான ஏற்பாடுகளைகவனிக்கத் தொடங்கினர்.
மரணப்படுக்கையிலிருந்த உமர்-இப்ன்-அல்-கத்தாப்(ரலி) தன்னால் மீண்டு வரமுடியாதுஎன்பதை அறிந்து, தனக்குப்பின்னர் முஸ்லிம் உம்மாவின் தலைவராக ஒரு கலீஃபாவை நியமிக்கஎண்ணி, மற்ற அனைத்து சஹாபாக்களையும்(ஷ_ரா) அழைத்து இறைத்து}தர் மறைந்துவிட்டார்கள். அவர்கள் குறைஷியரின் ஆறுபேரிடம் மிகுந்த திருப்தி கொண்டவர்களாகஇருந்தார்கள்.”" எனக்கூறி அலி(ரலி), உத்மான், தல்ஹாஹ்-இப்ன்-உபைதுல்லாஹ்,அஸ்ஸ_பைர்-இப்ன்-அல்அவ்வாம் சவூத்-இப்ன்-அபி-வகாஸ் மற்றும் அப்துர்ரஹ்மான்-இப்ன்-அவுஃப்ஆகிய ஆறு பெயரை குறிப்பிட்டார்கள். அவர்கள் தங்களிடையே பேசி முடிவுசெய்துதங்களுக்குள் ஒருவரை இஸ்லாத்தின் பிரதிநிதியாக, கலீஃபாவாக தேர்ந்தெடுக்கட்டும்”" என்றும்கூறினார்கள். மூன்று நாட்களில் எந்த முடிவும் ஏற்படாவிடில், அந்த ஆறுபேரில், எதிர்ப்பவரைகொன்றுவிடுவதற்காக ஐம்பது முஸ்லிம் படை வீரர்களையும் நியமித்தார்கள்.
இவை அனைத்தும்சஹாபாக்களின் முன்னிலையிலேயே கூறப்பட்டது. எனினும் எந்த சஹாபாவும் எதிர்ப்போமறுப்போ கூறாமல் முழுவதுமாக ஒப்புக்கொண்டனர்.இஸ்லாத்தில் ஒரு முஸ்லிமை கொலைசெய்யச் சொல்வதென்பது மிகப் பெரியவிசயமாகும். ஒரு முஸ்லிமை காயப்படுத்துவதே ஹராமாக்கப்பட்டுள்ள நிலையில்நபித்தோழர்களையே கொல்வதென்பது எவ்வளவு பெரிய செயல். இந்த நிலையில் சஹாபாவும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை, அனைவரும் சம்மதித்தனர். இதன்மூலம் ஒருகலீஃபாவை நியமிப்பது எவ்வளவு முக்கியக் கடமை என்பதை அறியலாம். சஹாபாக்களின்உயிரே போனாலும், ஒரு கலீஃபாவை நியமிக்க வேண்டியது அவசியம் என்பது இதன் மூலம் இதுதெளிவாகிறது.மூன்று நாட்களுக்கு மேல் கலீஃபா ஒருவர் இல்லாமல் இருப்பது ஒவ்வொரு முஸ்லிமிற்கும்பாவமாகும். அதற்கான முயற்சியில் அவர்கள் உடனடியாக ஈடுபடவேண்டும். அவ்வாறாககலீஃபாவை நியமிக்க முயற்சி செய்யும் பொழுது அதில் வெற்றி கிடைக்காவிடினும் பரவாயில்லை.ஏனெனில் கலீஃபாவை நியமிக்கப்பாடுபடுவது கடமை, அதில் வெற்றி கிடைப்பது நமது சக்திக்குஅப்பாற்பட்டது. நமது செயல்பாடுகட்கு மட்டுமே நாம் கேள்விகணக்கிற்கு உள்ளாவோம்.அச்செயல்ளின் விளைவுகள் அல்hலாஹ்(சுபு)வின் ஆணைப்படியாகும்.
கிலாஃபாவை நிலைநாட்டவேண்டியது ஃபர்த் எனத் தெரிந்தபின்னரும் அக்கடமையைச்செய்யாமல் இருப்பது அதற்குறிய பாவத்தைத் தேடித்தரும். கிலாஃபாவால் மட்டுமே மற்றையஅனைத்து இஸ்லாமியச் சட்டங்களும் வாழ்வில் நடைமுறைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும்.எனவே கிலாஃபாவிற்காக முயற்சிசெய்யாமல் இருப்பது மற்றைய சட்டங்களையும் பின்பற்றமுனையாமல் இருப்பதற்குச் சமம். அந்தப்பாவச்சுமையானது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும்உள்ளது. எவர் ஒருவர் கிலாஃபாவை நிலைநாட்ட முனைகிறாறோ அவரது பாவச்சுமைநீங்கிவிடும். எனினும் அவர் அம்முயற்சியை கிலாஃபா ஒன்று வரும் வரையோ அல்லது தமதுஉயிர் பிரியும் வரையோ தொடர்ந்து செய்ய வேண்டும். எனவே அல்லாஹ்(சுபு) நம்மீதுகடமையாக்கியுள்ள கிலாஃபா ஒன்று இருப்பதும், இல்லாவிடில் அதனை நிலைநாட்டமுயற்சிப்பதும், ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஃபர்த் என்பதை அறியமுடியும்.கிலாஃபாவின் ஒற்றுமைஇறைவன் வழங்கியருளிய இஸ்லாமியச் சட்டமனைத்தையும் பின்பற்றி நடக்கும் கிலாஃபாஆட்சிமுறையானது ஒரே ஒரு தலைமையும், ஒரே ஒரு நாடும் கொண்டதாகும். அது இன்றையகாலகட்டத்திலுள்ள ஃபெடரல் சிஸ்டம்போன்றதல்ல. ஒன்றுக்கு மேற்பட்டஇஸ்லாமிய அரசு இருப்பதும், ஒன்றுக்கும் மேற்பட்ட தலைமை இருப்பதும் இஸ்லாத்தில்கடுமையாக கண்டிக்கப்பட்ட ஒன்று. அதற்கான ஷரிஆ ஆதாரங்கள் உள்ளன.
அப்துல்லா இப்ன்அம்ர் இப்ன் அல்ஆஸ் அறிவிக்கிறார்கள். ரசூலுல்லாஹ்(ஸல்) கூறுகிறார்கள்
எவர் ஓர் இமாமிற்கு மனமுவந்து தன் சத்தியப்பிரமாணத்தை கொடுக்கிறாறோ, அவர் அந்தஇமாமின் கட்டளைப்படி நடக்க வேண்டும். அந்த இமாமிற்கு போட்டியாக இன்னொரு இமாம்வந்தால் அந்த இரண்டாவது இமாமை கொன்றுவிடவேண்டும்.
மேலும் அபுசெய்யத் அல்குத்ரி ரசூலுல்லாஹ்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்.
இரண்டு கலீஃபாக்களுக்கு பைஆ(சத்தியப்பிரமாணம்) கொடுக்கப்பட்டால் அவர்களுள்இரண்டாமவரை கொன்றுவிடவேண்டும்.
அர்ஃபாஜா அவர்கள் ரசூலுல்லாஹ்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்,
யார் ஒருவர் உங்களிடையே பிளவு ஏற்படுத்த முனைகிறாரோ அவரை கொன்றுவிடுங்கள்.
மேற்கண்ட ஹதீஸ்கள் வாயிலாக ஒரு தலைமைக்கு மேல் இருக்கமுடியாது என்பதைஅறியலாம். ஒரு முஸ்லிமாக இருந்தாலுமே அவரைக் கொல்லுதல் வலியுறுத்தப்பட்டுள்ளதால், ஒருதலைமையும், ஒரே நாடும், ஒரே உம்மாவும் எவ்வளவு முக்கியம் என்பதனை அறியலாம்.கிலாஃபாவானது மீண்டும் ஏற்படும்பொழுது அதன் முக்கிய செயல்பாடுகளுள் ஒன்றுஇன்றைய முஸ்லிம் பகுதிகள் அனைத்தையும் கிலாஃபா அரசின் கீழ் கொண்டுவந்து ஒரே நாடு,ஒரே மக்கள்என முஸ்லிம்கள் அனைவரையும், அவர்களின் செயல்பாடுகளையும் ஒரே அரசின் கீழ் கொண்டுவருவதாகும். இன்று காணப்படும் எல்லைக்கோடுகள் செயற்கையாகஉருவாக்கப்பட்ட ஒன்றாதலால் அது தகர்த்தெரியப்படும்.

அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை (அந்-நஜ்ம் 53: 3-4)
எவர் (அல்லாஹ்வின்) து}தருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்(அந்நிஸா 4: 80)
முதல் இஸ்லாமிய அரசை மதினாவில் நிறுவிய நபிகளார்(ஸல்), அதற்கான முயற்சியை இறைவனின் ஆணைப்படியே நடைமுறைப்படுத்தினார். எனவே நாமும் நபிகளாரின் வழியையே பின்பற்றவேண்டும். அதுவே இறைவன் காட்டிய வழிமுறையாகும்.
(நபியே!) நீர் சொல்வீராக! இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும். நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்.” (யூசுப் 12: 108)
முதற்கட்டம்- பண்படுத்துதல்
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. அலக்என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.( அல் அலக் 96: 1-5 )
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக (அத்துஹா93:11)
ஆகிய சூராக்கள் மூலம் முஹம்மத்(ஸல்) அவர்களின் நபித்துவம் தொடங்கியது.
தமக்கு வந்த கட்டளையை முதன் முதலில் தமது குடும்பத்தினருக்கு எடுத்துரைத்தார்கள். பின்பு ஆருயிர்த்தோழர் அபுபக்கர்(ரலி) அவர்களிடம் விவரித்தார்கள். அதன்பின்னர் அபுபக்கர்(ரலி) அவர்களின் உதவியுடன் மற்றைய நம்பிக்கைக்குரிய நெருங்கியவர்களிடம் தமது து}துத்துவம் பற்றியும், ஓரிறைக்கொள்கை பற்றியும் எடுத்துரைத்தார்கள். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நபியவர்களின் செய்தி மக்கா நகர் முழுவதும் பரவியது.
இந்த ஆரம்ப காலகட்டமாகிய மூன்று ஆண்டுகளில் இஸ்லாமானது தனிநபர்கட்கு மட்டுமே போதிக்கப்பட்டது. தொழுவுருவங்களை வணங்கும் கூட்டத்தாரையும்(முஸ்ரிகீன்), அவர்களது அறியாமையையும்(ஜஹிலியா) நேரடியாக எதிர்நோக்கவில்லை. மாறாக இந்தக் காலகட்டத்தில், எதுவந்தாலும் எதிர்நோக்கத் தயாராகின்ற ஒரு மனோநிலையையும், குர்ஆனை வாழ்நாளில் நடைமுறைப்படுத்துகின்ற, உயர்ந்த ஒழுக்க நெறியை பிரதிபலிக்கின்ற பண்புகளையும், தமக்கு நெருங்கிய, தகுதியுடைய சிலரிடையே கற்பித்து, அவர்களைக் கொண்டு ஒரு கூட்டத்தினரை உருவாக்கினார்கள். அத்தகைய பண்புகள் மூலம் அவர்கள், தாம் வாழும் சமூகத்தை நேரிடையாக எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர்.
ஆனால், நபிகளாரும் அவரது குழுமத்தினரும் எதிர்கொண்ட சமுதாயம் இஸ்லாம் அல்லாத நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும், சட்டதிட்டங்களையும் கொண்டிருந்தது. அதாவது அந்தச் சமுதாயம் மொத்தத்தில் ஒரு ஜஹில் சமுதாயமாக இருந்தது. இந்தப் பின்னணியில்தான் நபிகளார் (ஸல்) தமது குழுமத்தினரிடையே இஸ்லாமிய அறிவை ஊட்டி, அல்லாஹ்(சுபு)வின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்றை வலுவூட்டினார்கள். அவர்களது ஜஹில் நடைமுறைகளைத் தகர்த்து, தவ்ஹீது (ஓரிறைக்) கொள்கையையும், நடைமுறைகளையும் செறிவூட்டினார்கள். தமது நம்பிக்கைக்குறிய அந்த முஸ்லிம்களை, நபிகளார், தாருல் அர்காம் எனுமிடத்தில் கூட்டி குர்ஆனின் வழிகாட்டுதலை அவர்கட்கு விளக்கினார்கள்.
இன்றைய சமுதாயமும் அன்றைப்போலவே ஒரு ஜஹில் சமுதாயமாகவே உள்ளது. தனி ஆளாக நாம் ஒவ்வொருவரும் முஸ்லிமாக இருந்தபோதும், ஒரு சமுதாயமாக, அதன் சட்டதிட்டங்களும், சமூக அந்தஸ்துகளும் இஸ்லாமாக இல்லை. எனவே நபிகளாரின்(ஸல்) பாதையைப் பின்பற்றி நாமும் ஒரு குழுவினை தயார்படுத்தி, அவர்களிடையே இஸ்லாமிய அறிவையும் எதையும் தாங்கும் மனோபலத்தையும் உருவாக்க வேண்டும்.
கிலாஃபாவை நிறுவி இஸ்லாமிய வாழ்க்கை முறையை பின்பற்ற, முஸ்லிம்களை அழைக்கின்ற இந்தப் போராட்டத்தின் முதல் கட்டமாக இஸ்லாமிய மார்க்கத்தினைப் பற்றிய ஆழ்ந்த அறிவை பயிற்றுவித்து, பொறுமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட நபர்களை உருவாக்குதல் அவசியம். இஸ்லாத்தின் மீது அவர்கள் கொண்ட பற்றும் அவர்களது செயல்பாடும், மக்களிடையே இஸ்லாத்தின் மீதுள்ள நம்பிக்கையை வலுச்செய்யுமாறு இருக்க வேண்டும். மார்க்கத்தின் மீது தெளிவான அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு தஆவாவை மக்களிடையே சுமந்து செல்லும் ஒரு குழுவாக அதனை உருவாக்குதல் மிக அவசியமாகும்.
ஒரு கூட்டமாக செயல்படுவதன் அவசியம்.
தனியொருவரால் கிலாஃபாவை நிலைநாட்டுவதென்பது இயலாத காரியம் மட்டுமன்றி நபிவழியுமல்ல. அது முஸ்லிம்கள் ஒன்றிணைந்து செயல்படுத்தவேண்டிய ஒரு கடமையாகும். நபிகளார், தம்மை பின்பற்றி வருவோர் யாரையும் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கவில்லை. முஸ்லிம்கள், தாருல்-அர்காம் எனுமிடத்தில் ஒன்றுகூடி இஸ்லாமை கற்றனர். அங்கு அவர்கள் ஒன்றாக தொழுது ஒரு குழுவாகவே செயல்பட்டனர். அது ஒரு தனித்தன்மை வாய்ந்த கூட்டமாகும்.
சஹாபாக்கள் ஒரு குழுமமாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. ஒருசமயம் சஹாபாக்கள் ஒன்றுகூடி விவாதித்துக் கொண்டிருந்தபொழுது, “நபிகளாரைத் தவிர வேறு யாரும் குர்ஆன் ஓதக் குறைஷியர்கள் கேட்டதில்லைஎனக் குறிப்பிட்டனர். அப்போது அப்து அல்லாஹ் பின் மசூது எனும் சஹாபி தாம் மறுநாள் குறைஷியர் முன் குர்ஆனை ஓதப்போவதாகக் கூறினார். மறுநாள் அவர் கஃபாவின் முன் சென்று, குறைஷியர்கட்கு கேட்கும்படி, சத்தமாக குர்ஆனை ஓதத் தொடங்கினார். அதைக் கேட்ட குறைஷியர் அந்த சஹாபியை தாக்கத் துவங்கினர். தமக்கு நேர்ந்ததை மற்ற சஹாபிகளிடம் அவர் கூறினார். அதற்கு அவர்கள் இப்படித்தான் நடக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம்என்றனர். அதைக்கேட்ட அந்த சஹாபி, தாம் மறுநாளும் அதேபோல ஓதப்போவதாக கூறியதைக்கேட்ட மற்ற சஹாபாக்கள் வேண்டாம். நீங்கள் இதுவரை செய்ததே போதும் அவர்கள் கேட்க விரும்பாததை நீங்கள் கேட்கச்செய்துவிட்டீர்கள்.எனக் கூறினர்.
மற்றொரு சமயத்தில், இஸ்லாத்தில் ஏசுநாதரின் இடம் பற்றிய குறைஷியரின் புகாருக்கு விளக்கம் கேட்டு, அபிசினியாவிலிருந்து முஸ்லிம்கட்கு அழைப்பு வந்தது. அதற்கு முஸ்லிம்கள் தமது குழுவை கூட்டி விவாதித்தனர். பின்னர் குர்ஆனிலுள்ளதை அப்படியே கூற முடிவெடுத்து, தமது சார்பாக ஜாஃபர் பின் அபுதாலிப் எனும் சஹாபியை அனுப்பிவைத்தனர். அந்த சஹாபியின் விளக்கம் கேட்ட அபிசினியாவின் நேகஸ் சாந்தமுடன் இருங்கள். உங்கட்கு இடையூறிழைப்பவர் தண்டனைக்குள்ளாவர். நீங்கள் விரும்பியபடி எங்கும் செல்லுங்கள். எனது நாட்டில் உங்கட்கு எப்பொழுதும் பாதுகாப்பு உண்டு.”" என்றார்.


இரண்டாம் கட்டம் : பகிரங்க அழைப்பு
ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக. இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக! உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம். இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக் கொள்கிறார்கள். (இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்து கொள்வார்கள். ( 15:94- 96)
என்ற குர்ஆனிய வசனம் மூலம், நபிகளாரின் அழைப்புப்பணி, ‘தனிநபரை பண்படுத்துதல்என்ற கட்டத்தைத் தாண்டி, பகிரங்க அழைப்புக் கட்டத்தை தொடங்கியது. இந்த நிலையில், நபிகளார், குறைஷியர்களின் ஜஹிலிய பழக்கவழக்கங்களை நேரடியாக எதிர்க்கலானார்கள்.அல்லாஹ்(சுபு)வைத் தவிர வேறுகடவுள் இல்லை என்பதை ஏற்று, அவனையே வணங்க வேண்டும்எனக் குரல் கொடுக்கலானார்கள். பொதுமக்களின் கவனம் எப்பொழுதும் இஸ்லாத்தின் மேல் இருக்க வேண்டும் என்ற நோக்குடனே தமது நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டார்கள். முதலில், தமது வீட்டில் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்து, அதில் கலந்துகொள்ள தமது உறவினர்களை அழைத்தார்கள். அவர்களுள் குறைஷியர்களின் முக்கியத் தலைவர்களும் அடங்குவர். அந்த விருந்தில் அல்லாஹ்(சுபு)வைப் பற்றியும், தமது நபித்துவத்தைப் பற்றியும், இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் சொர்க்கலோகம் அடைவதைப்பற்றியும் நபிகளார் விவரித்தார்கள். ஏற்காவிடின் ஏற்படும் விளைவுகளான நரக நெருப்பின் தண்டனை பற்றியும் குறிப்பிட்டார்கள்.
நரகத்தை நோக்கி, ‘நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அதுஇன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)! (50:30)
மற்றொரு சமயத்தில், நபிகளார் அஸ்ஸஃபா குன்றின் மீதேறி, அங்கு கூடியிருந்த குறைஷியரை நோக்கி குன்றின் பின்புறமிருந்து ஒரு படை தாக்க வருகிறது என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களாஎன்றார்கள். இதுவரை உம்மிடமிருந்து உண்மையைத்தவிர வேறு எதையும் கேட்டிராததால் அதை நாங்கள் நம்புவோம்என்றனர். அதற்கு நபிகளார்மிகக் கடுமையான, துன்பமிக்க வேதனையைக் குறித்து உங்களை எச்சரிக்கவே நான் இங்கு அனுப்பப்பட்டுள்ளேன்என்றார்கள்.
ஹம்சா(ரலி) அவர்களும் உமர்-அல்-கத்தாப்(ரலி) அவர்களும் இஸ்லாத்தை தழுவியது ஒரு மிகமுக்கிய நிகழ்வு ஆகும். அந்நிகழ்விற்குப்பின், நபிகளார், முஸ்லிம்களை, ஹம்சா(ரலி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவாகவும், உமர்(ரலி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவாகவும் ஆக்கி கஃபாவைச்சுற்றி ஊர்வலமாக வரச்செய்தார்கள். இதனைக் கண்ட மக்கா நகர மக்கள் அதிர்ச்சியடைந்தனர். முஸ்லிம்கள் முதன்முறையாக பகிரங்கமாக அந்த ஜஹிலிய சமூகத்தை எதிர்கொண்டனர். இதற்கு முன்னால் முஸ்லிம்கள் மறைமுகமாகவே தொழுதுவந்தனர். ஆனால் இந்த நிகழ்வுக்குப் பிறகு கஃபாவின் முன் கூடி தொழ ஆரம்பித்தனர்.
இந்த காலகட்டம், நபிகளாரும் அவரைப்பின்பற்றிய முஸ்லிம்களும் ஜஹிலிய சமூகத்தை பகிரங்கமாக எதிர்கொண்ட காலகட்டமாகும். அவர்கள் ஒரு அமைப்பாகச் செயல்பட்டு சமூகத்திலிருந்த பழக்கவழக்கங்கள், சட்டங்கள், நடைமுறைகள் ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ள ஆரம்பித்தனர். அதிகாரத்துவமும் பணத்தாசையும் மிக்க ஜஹிலிய சமூகத்தை எதிர்த்த விதத்தை குர்ஆன் விளக்குகிறது.
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹ{தமாவில் எறியப்படுவான். (104: 1-4 )
செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (102:1-3)
சமூகத்தின் கீழ்மட்டத்திலுள்ளோரை கவனிக்காத மக்களை ஏமாற்றிய பொய்யர்களான குறைஷிய தலைவர்களை சபித்து அல்லாஹ் கூறுகிறான். (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் து}ண்டுவதில்லை. (107: 1- 3)
அவர்களது நடைமுறைகளை எதிர்த்து குர்ஆன் வசனம்
அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். (83: 1-3)
குறைஷிய தலைவர்களை நோக்கி,
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக அவனும் நாசமாகட்டும். அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). ( 111:1-5)
அல் வலீத் பின் அல் முகிராவைக் குறித்து அல்லாஹ் குறிப்பிடுகிறான்
எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர். (சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர். அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர். (அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன் வரம்பு மீறிய பெரும் பாவி. கடின சித்தமுடையவன், அப்பால் இழி பிறப்புமுடையவன். பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால் - நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், ‘இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்என்று அவன் கூறுகின்றான். விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம். (68: 8-16)
ஜஹிலியாவை எதிர்த்து நின்ற இந்த சிந்தனைப் போராட்டத்தால், நபிகளாரிடமும் முஸ்லிம்களிடமும் குறைஷியர்கட்கு ஒருவித கசப்புணர்வு தோன்றியது. மக்கள் முஸ்லிம்களைவிட்டும் விலகிச்செல்ல ஆரம்பித்தனர். குறைஷியர்கள், நபிகளாருக்கெதிரான எதிர்ப்புணர்வை பரப்பலாயினர். நபிகளாரின் பெரியதந்தை அபிதாலிப் அவர்களிடம் சென்று நம் மூதாதையர்கள் கேலி செய்யப்படுவதையும், நமது நடைமுறைகள் இழிவுபடுத்தப்படுவதையும், நமது கடவுளர் அவமதிக்கப்படுவதையும் இனிமேலும் பொருத்துக்கொள்ள இயலாது “” என முறையிட்டனர்.
மார்க்கப் போராட்டம்
சமூகத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் இத்தகைய காலகட்டத்தில், சஹாபாபெருமக்களின் மனதில் விதைக்கப்பட்டதைப் போல இஸ்லாத்தின் மேல் ஒரு ஆழ்ந்த நம்பிக்கையை, மக்கள் மனதில் விதைப்பது அவசியம். இந்த மாற்றம் மக்களின் சிந்தனை சம்பந்தப்பட்டது. எனவே இந்த மாற்றத்தை ஒரு அறிவுப் போராட்டத்தாலன்றி வேறெந்த போராட்டத்தாலும் ஏற்படுத்த முடியாது. அந்த சிந்தனைப் போராட்டம், இஸ்லாம் அல்லாத ஏனைய மார்க்கங்களையும் அதனைச் சார்ந்த நடைமுறைகளையும் ஒதுக்கித்தள்ளுகிறது. அத்தகைய அறிவுப் போராட்டத்தையே ஒரு இஸ்லாமிய இயக்கம் செயல்படுத்த வேண்டும். இஸ்லாம் அல்லாத ஏனைய மார்க்கங்களான கம்யூனிசம், முதலாளித்துவம்(கேபிடலிசம்) போன்றவற்றையும், அதனைச் சார்ந்த மக்களாட்சி, தேசீயம் போன்றவற்றையும் கேள்விக்குறிகளாக்குகின்ற ஒரு சிந்தனை அலையை மக்களிடையே உருவாக்க வேண்டும். இஸ்லாம் அல்லாத, இஸ்லாத்திற்கு எதிரான நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
இஸ்லாமிய தஆவாவை எதிர்க்கின்ற எந்த ஒரு அரசையும் அதன் சூழ்ச்சியையும் மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டும். அவர்களது நேரடி அல்லது மறைமுக இஸ்லாம் எதிர்ப்புப் போக்கை முஸ்லிம்களிடையே பகிரங்கப்படுத்துவது அவசியம். இதுவே நபிகளார் நமக்குக் காட்டிய வழியாகும். எவர் இத்தகைய கடமையை ஆற்றுவதினின்றும் தவறுகிறாறோ அவர் நபிவழியைப் பின்பற்றத் தவறுபவரே ஆவார்.
சமரசம்
தமது வாதத் திறமையினால், நபிகளாரைக்(ஸல்) கட்டுப்படுத்த குறைஷியர் முயன்றனர். ஆனால் அவர்கட்கு தோல்வியே மிஞ்சியது. அதன்பிறகு, நபிகளாரின் தஆவாவை அடக்க, எண்ணற்ற செல்வமும், மிகப்பெரும் அந்தஸ்தும், தலைமைப் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அதற்குப் பகரமாக ஆழைப்புப் பணியை நிறுத்திடவேண்டும் எனப் பேரம்பேசலாயினர். ஆனால் எந்நிலையிலும் எதற்காகவும் இறைப்பணியை விட்டுவிட நபிகளார் தயாராக இல்லை. எனவே எந்நிலையிலும் நபிகளார் தஆவாவில் சமரசப்போக்கை கடைபிடிக்கவில்லை.
இறைச் சட்டத்தை நிறைவேற்ற, நபிகளாரின் வழியைப் பின்பற்றி பாடுபடும் முஸ்லிம்கள், எந்நதவித சமரசப்போக்கையும் நிராகரித்துவிடவேண்டும். இஸ்லாமையும் ஜஹிலியாவையும் ஒன்றாக நடைமுறைப்படுத்த முடியாது. இஸ்லாம் பாதியும் இஸ்லாம் அல்லாதவை பாதியுமாக ஆட்சிபுரிவது இஸ்லாம் அன்று. அது ஜஹிலியாவே ஆகும். இறைவனின் ஷாPஆ சட்டம் ஒன்றே முழுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது இஸ்லாம் அல்லாத சட்டங்களே ஆகும்.
இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள். அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. ( 5:49)
எனவே இஸ்லாம் அல்லாத ஆட்சியமைப்பில் பங்கு கொண்டு, அதன் மூலம் இஸ்லாத்தை சில துறைகளில் மட்டும் சமூகத்தில் நடைமுறைப்படுத்துவது நபிவழியன்று. படிப்படியாக இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றுவதென்பது, இஸ்லாத்தையும் இஸ்லாம் அல்லாதவற்றையும், அதாவது உண்மையையும்(ஹக் ) பொய்யைபும்(பாதில்) கலப்பதாகவே அமையும். இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றுவதென்பது கிலாஃபா அரசை அமைப்பதே ஆகும். எனவே கிலாஃபா ஆட்சிமுறையை நிலைநாட்டப் பாடுபடும் முயற்சியில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரபு நாட்டின் அரியாசனத்தில் நபிகளாரை(ஸல்) ஏற்றுவதாக உறுதியளித்த பனு- அமிர் கூட்டத்தின் உதவியை நபிகளார் ஏற்க மறுத்தார்கள். ஏனெனில் நபிகளாருக்குப்பின்(ஸல்) தாமே அரியாசனத்தில் அமர வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்தனர். பாரசீகர்களைத் தவிர மற்ற அனைவரிடமிருந்தும் நபிகளாரைக் காப்பதாகக் கூறிய ஷிபான்-பின்-தலபா கூட்டத்தினரையும் அவர்கள் நிராகரித்தார்கள். ஏனெனில் உதவியானது வேறு எந்த நிபந்தனையுமின்றி இருக்கவேண்டும், அதன்மூலமே இஸ்லாமிய தஆவாவை பரப்ப முடியும் என்பதில் நபிகளார்(ஸல்) உறுதியாக இருந்தார்கள்.
அதிகாரம் பெறுவதற்காக ஆட்சியமைப்பில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. இஸ்லாமிய வழிமுறையை விட்டும் விலகி இஸ்லாம் அல்லாத முறையில் ஆட்சியைப் பிடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அல்லாஹ்(சுபு) கூறியுள்ளபடியான ஆட்சிமுறையை நிலைநாட்டி இஸ்லாமிய வழியில் வாழ்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டிருந்தாலும், இறைவனின் நன்மதிப்பைப் பெரும் வகையில் நமது வழிமுறைகளை அமைத்துக்கொள்வதே இஸ்லாமிய வழிமுறையாகும். எனவே தனிமனிதரோ அல்லது இயக்கமோ எதுவாயினும் தமது நடவடிக்கைகள் அனைத்தும் இறைவனை மகிழ்விக்கவேயன்றி வேறொரு எண்ணத்தைக் கொண்டிருக்கக் கூடாது. பாராட்டுதலைப் பெறுவதோ, புகழினை அடைவதோ அல்லது செல்வம் சேர்ப்பதோ தமது நடவடிக்கைகட்கு அடிப்படையாக அமையக்கூடாது. அந்த இயக்கத்தின் தலைமையின் மற்றும் அக்கொள்கைளை சுமந்து செல்லும் இயக்க உறுப்பினர்களின் முழு ஈடுபாடும் அவர்களது நடவடிக்கைகள் வாயிலாக உலகுக்கு உணர்த்தப்படவேண்டும். அதுவே வெற்றியின் பாதையை சிறப்புடையதாக்கும். மேலும் வெற்றியானது இறைவனால் மட்டுமே கொடுக்க முடியும்.
துன்புறுத்தும் வேதனை
பேச்சுவார்த்தையால் நபிகளாரை(ஸல்) அமைதிப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த குறைஷியர் வன்முறையை கடைபிடிக்கலாயினர். சமூக அமைப்பின் படியாக தப்பிவிட முடியாதபடி, அவர்கள், முஸ்லிம்களை கொடுமைப்படுத்தலாயினர். முஸ்லிம்கள் சிறைப்பிடிக்கப்பட்டு, கொடுமைக்காளாகி, கொல்லப்படவும் செய்தனர். அவது}றுப் பேச்சினாலும், பொய்ப்பிரசாரங்களினாலும் நபிகளாரைத் தாக்கிய குறைஷியர் உடலளவிலும் அவர்களைக் கொடுமைக்காளாக்க விழைந்தனர். அத்தகைய கொடுமைகளைக் கண்ட நபிகளார்(ஸல்) முஸ்லிம்களை, அல்லாஹ்(சுபு)விடமிருந்து உதவி வரும்வரை அபிசீனிய நாட்டில் தஞ்சம் புகப் பணித்தனர்.
உமர்(ரலி), ஹம்சா(ரலி) ஆகியோர் இஸ்லாத்தில் இணைந்ததும், முஸ்லிம்கள் அபிசீனிய நாட்டில் தஞ்சம் புகுந்ததும், இஸ்லாம் மேன்மேலும் பரவிவருவதும் குறைஷியரின் கோபத்தை அதிகரித்தன. அவர்கள் முஸ்லிம்களை முழுமையாக புறக்கணிக்க முடிவுசெய்தனர். முஸ்லிம்களிடம் எவ்வித பேச்சுவார்த்தைகளோ, திருமண பந்தங்களோ, வியாரபாரத்தொடர்போ இல்லாமல் முழுமையாக புறக்கணித்தனர். அதனால் முஸ்லிம்கள் மக்கா நகருக்கு வெளியே ஒரு பள்ளத்தாக்கில் தஞ்சம் புகுந்தனர். நபித்துவத்தின் ஏழாவது ஆண்டில் தொடங்கிய இப்புறக்கணிப்பு மூன்றாண்டுகள் வரை நீடித்தது. புறக்கணிப்பு முடிவுற்ற குறுகிய காலத்தில் கதீஜா அம்மையாரும் அதன்பின்னர் பெரியதந்தையாம் அபுதாலிப் அவர்களும் இயற்கைஎய்தினர்.
இத்தகைய மார்க்கப் போராட்டத்தில் ஈடுபடுகின்ற இஸ்லாமிய இயக்கமானது, ஜஹிலிய பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ள பொதுஜனத்தின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். நாட்டை ஆளும் அரசுகள் அவ்வியக்கத்தினரை துயரங்கட்காளாக்கி சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தவும் தயங்காது. இது தவிர்க்க இயலாததாக இருப்பினும், எவ்விதத்திலும் கொண்ட கொள்கையிலிருந்தும் விலகிவிடக்கூடாது.
தியாகம்
இஸ்லாத்தின் ஆட்சியானது கிலாஃபா மூலம் இவ்வுலகில் நடைபெறச் செய்ய தியாகங்கள் பல செய்ய நேரிடும். தமது குடும்பம், கட்டிக்காத்த சொத்துக்கள், ஆகியவற்றை கஷ்டத்திற்குள்ளாக்குகின்ற மாபெரும் சோதனையைத் தாங்கிக்கொள்ளும் மனோபலமும், பொறுமையும் வேண்டும். அத்தகைய துன்பங்களினால் தமது கொள்கையை விட்டும் விலகிச்சென்றுவிடாமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். நன்மை தீமையை, நல்லது கெட்டதை பிரித்தறிய அல்லாஹ்(சுபு)வின் சோதனை நிச்சயம் நடைபெறும். இதுவே நியதி. அல்லாஹ்(சுபு) தமது அருள்மறையிலே கூறுகிறான்.
நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். ( 29: 2-3)
நபிமார்களும் அவர்களைப் பின்தொடர்ந்தோரும் கடுமையான துன்பங்கள் மூலம் சோதிக்கப்பட்டனர். அவர்கள் எதிர்கொண்ட நிலையை அல்லாஹ்(சுபு) விளக்குகிறான். உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்என்று து}தரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (2: 214)
இஸ்லாத்தின்மீது முழு நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டு இஸ்லாத்தை வாழ்வில் அமல்படுத்த, கிலாஃபாவை நிலைநாட்ட, அழைப்புப்பணியில் ஈடுபடும் ஒவ்வொரு முஸ்லிமும் இத்தகைய கஷ்டங்களுக்கு உள்ளாவது உறுதி. இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் இந்த அரசுகளின் அடக்கு முறை, நம்பிக்கை கொண்டோரின் அழைப்புப்பணியை எந்தவிதத்திலும் பாதித்துவிடக்கூடாது. அத்தகைய சோதனையான காலகட்டங்கட்குப்பிறகே அல்லாஹ்(சுபு) தமது இறைத்து}தருக்கு உதவியை அளித்ததாகக் கூறுகிறான்.
(
நம்) து}தர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது( 12: 110)
எனவே, இறைவனின் உதவியும் வெற்றியும் உண்மையாக இறைவனின் கட்டளையை ஏற்றுப் பாடுபடும் ஒவ்வொரு விசுவாசிக்கும், சோதனைகட்குப்பிறகு கண்டிப்பாக வந்து சேரும். இறை ஆணையைவிட இந்தச் சொத்துக்கள் பெரிதல்ல. நாமும் நாம் இந்த உலகில் அனுபவிக்கும் ஒவ்வொரு இன்பமும் இறைக்கட்டளையைவிட உயர்வானதன்று.
(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் து}தரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (9:24)

1 comment: