Sunday, October 10, 2010

கிலாபத் அழிக்கப்பட்டு 86 வருடங்கள் (கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை)

கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 86 வருடங்கள் கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை"
by One Ummah on Friday, September 17, 2010 at 8:47pm
شَرَعَ لَكُم مِّنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَن يَشَاء وَيَهْدِي إِلَيْهِ مَن يُنِيبُ "He hath ordained for you that religion which He commended unto Noah, and that which We inspire in thee (Muhammad), and that which We commended unto Abraham and Moses and Jesus, saying: Establish the religion, and be not divided therein. Dreadful for the idolaters is that unto which thou callest them. Allah chooseth for Himself whom He will, and guideth unto Himself him who turneth (toward Him)." (Quran - 42:13) 
"கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 86 வருடங்கள் கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை" 
  03.03.1924 ஆம் திகதி திங்கள் கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது மனித குலத்துக்கு விடுதலையாய் இருந்த முஸ்லிம்களின் சாம்ராஜ்யம் வீழ்த்த பட்டது மேற்கு கண்ட கனவு நிஜமானது முதல் சிலுவை யுத்தத்தில் முஸ்லிம்களிடம் தேற்றவர்கள் இரண்டாம் சிலுவை யுத்தத்தின் மூலம் இஸ்லாமிய சாம்ராஜியத்தை வெற்றி கொண்டனர். இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை 1300 ஆண்டுகள் மனித இனத்திற்கு அருளாய் இருந்த சாம்ராஜ்யம் தேசிய வாதம் என்ற மேற்கின் விஷம் ஏற்றபட்டு முஸ்லிம் உம்மாஹ் கோமா நிலையில் போடப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக துடித்துக்கொண்டு இருக்கிறது இந்த வேலையில் முஸ்லிம் உம்மாஹ் கிலாபத்தை இழந்து இன்றுடன் 86 வருடத்தில் கால் எடுத்து வைக்கின்றது. 

Wednesday, October 6, 2010

பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள் "இஸ்லாம் காட்டும்நெறிமுறை"


பெண் பாதுகாகப்பட வேண்டியவள் இஸ்லாம் காட்டும்நெறிமுறை
Author - Ahmad Baqavi

பர்தா பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?
அறியாமைக் கால மக்கள் நெறிமுறையோ ஒழுக்கமோ இன்றி மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். பெண்கள் ஆடவரை ஈர்த்து நிற்க்கும் கவர்ச்சிகரமான ஆடை ஆபரணங்களை அணிந்து நறுமணம் பூசி தெருக்களிலும். கடை வீதிகளிலும் பவனி வந்தனர். இதனால் பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு அவர்களின் கற்பு சு~றையாடப்பட்டன. அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு சமுதாயத்தின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டனர். இவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை அளித்து கௌரவமாக நடத்தப்பட வேண்டுமென்பதற்காக இஸ்லாம் பல நடவடிக்கைகளை எடுத்தது. அவற்றுள்
முதன்மையாக:- அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்

என பின் வருமாறு ஆணைப்பிறப்பித்தது.

இஸ்லாமியர்களை வழிநடத்திய கலீபாக்கள்

கி. பி 632 லிருந்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட கலீபாக்களின் தவகல் தரப்பட்டுள்ளது .  1924 ஆண்டுக்கு பிறகு நம்மிடையே எந்த கலீபாவும் இல்லாததால் இஸ்லாமிய உலகம் பல தேசங்களாக்கப்பட்டு சீரழிக்கப்படுகிறது. இதை முஸ்லிம்கள் உணர்ந்து ஒன்றுப்பட்டு நம்முடைய கிலாபத்தை உருவாக்க போராட வேண்டும் .

Sunday, October 3, 2010

முஸ்லிம் நாடுகள் (List of Islamic Countries )

எல்லை கோடுகளுக்குள் ஆக்கப்பட்ட முஸ்லிம் நாடுகள் கீழே கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் விக்கிபீடியாவிலிருந்து  எடுக்கப்பட்டது .

Saturday, October 2, 2010

Khilafah is coming back

இஸ்லாமிய மறுமலர்ச்சி: Jummah Kutbah

இஸ்லாமிய மறுமலர்ச்சி: Jummah Kutbah

Jummah Kutbah

http://www.ustream.tv/recorded/9925350

இஸ்லாமிய மறுமலர்ச்சி: கிலாஃபா ஒரே தீர்வு

இஸ்லாமிய மறுமலர்ச்சி: கிலாஃபா ஒரே தீர்வு

இஸ்லாமிய மறுமலர்ச்சி: பஞ்ச பூதங்களை பதம் பார்க்கும் கருவேல மரங்கள் : விவசாயத்தை சீரழிக்கும் கொடூர "கிருமி'

இஸ்லாமிய மறுமலர்ச்சி: பஞ்ச பூதங்களை பதம் பார்க்கும் கருவேல மரங்கள் : விவசாயத்தை சீரழிக்கும் கொடூர "கிருமி'

Monday, September 27, 2010

கிலாஃபா ஒரே தீர்வு

இஸ்லாமிய அரசான கிலாஃபாவானது, முஸ்தஃபா கமாலின் சீரிய முயற்சியின் மூலம்வீழ்த்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு,
இஸ்லாத்தின் தலைமையகமாக இருந்து உலகினை ஆட்டிப்படைத்த துருக்கி இப்பொழுது ஒரு சாதாரண பால்கன்நாடாக வீழ்ந்து விட்டது.

பஞ்ச பூதங்களை பதம் பார்க்கும் கருவேல மரங்கள் : விவசாயத்தை சீரழிக்கும் கொடூர "கிருமி'

ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் தவறாமல் தெரியும் காட்சியில், கருவேல மரங்களுக்கு முதலிடம் உண்டு. கல்லூரிகள், பஸ்ஸ்டாண்ட், அரசு மருத்துமவனைகள், கலெக்டர் அலுவலகம், கண்மாய் நீர் நிலைகள், புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில் பாகுபாடின்றி படர்ந்து வளரும் உரிமை கருவேல மரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் வறட்சி மாவட்டமாக முத்திரை குத்தப்பட்ட நாளிலிருந்து, அதற்கான முக்கிய பங்காக கருவேல மரங்களே இருந்து வருகின்றன. பயனற்ற தாவரமாக கருதப்பட்ட இவற்றை, தற்போது பணம் கொழிக்கும் பொருளாக பாவித்து வளர்க்கத்தொடங்கிவிட்டனர். அந்த அளவுக்கு இங்கு கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு வந்தாகிவிட்டது. இருந்தும் இந்த கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்பை ஒருசிலரை தவிர பலரும் உணரவில்லை. இன்று நாம் சிந்தும் ஒவ்வொரு வியர்வைக்கும் மூல காரணமாக இருப்பவை இந்த கருவேல மரங்கள் தான். புவிவெப்பமயமாகி வருவதற்கு பேருதவியாக இருப்பவை இந்த கருவேல மரங்களே. அதன் பிடியில் சிக்கி தவித்து வரும் இம்மாவட்டம், எப்படி மீண்டு வரப்போகிறது என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஐந்தறிவு உயிரினங்களின் புறக்கணிப்பு: கருவேல மரங்களின் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்திற்கும் பயன்படாதவை. இம்மரத்தின் நிழலில் கட்டிவைக்கப்படும் கால்நடைகள் "மலடாக' மாறும் என்பது, சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் இவை முளைத்துள்ள பகுதியில் வேறு செடிகள் வளரமுடியாது. இவற்றின் விஷத்தன்மை அறிந்தே, இதன் மீது எந்த பறவையும் கூடுகட்டுவது இல்லை. ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் அனைத்தும், கருவேல மரங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வருகின்றன. இதை அறியாமல் மனிதர்கள் தான், தற்போது கருவேல மரங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளும் தங்களை தான் சேரும் என்பதை மனிதர்கள் உணர்வதில்லை.

ஆமோதித்தது அறிவியல்: கருவேல மரங்கள் குறித்த கருத்துகளை பாட்டி கதைகள் என நினைப்பவர்களுக்கு , அவற்றின் ஆபத்தை அறிவியலும் உணர்த்தியுள்ளது. கருவேல மரங்கள் ஆக்சிஜனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் கரியமிலவாயுவை அதிக அளவில் உற்பத்தி செய்து விடுகிறது. இதனால் சுற்றுப்புற காற்று மண்டலம் மாசுபடுகிறது. மாசுபடுகிறது என்பதை விட நச்சு தன்மைக்கு மாறுகிறது என்றே கூறலாம். அந்த அளவுக்கு காற்றை மாசுபடுத்தும் தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. இவை அனைத்தும் அறிவியல் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்ட தகவலாகும். அதன் பிறகும் கருவேல மரங்கள் வளர்ச்சியை வேடிக்கை பார்த்து வருவது, நமது சந்ததிகளுக்கு நாமே தீ வைப்பதற்கும் சமமாகும். இன்றுள்ள நிலைப்படி, ராமநாதபுரத்தின் வறட்சி நிலை, இன்னும் 10 ஆண்டுகளில் இருமடங்காகும் வாய்ப்புள்ளது. இதை அனுபவசாலிகள் மட்டுமல்ல, அறிவியல் ஆய்வாளர்களும் ஆமோதித்து வருகின்றனர். இருந்தும் பொதுமக்கள் தரப்பில் இது குறித்த புரட்சி எப்போது வரப்போகிறது என்பது தான் கேள்வி.

கொடூரமும், கோரமும்: பட்டா, புறம்போக்கு நிலங்களில் கம்பீரமாய் காட்சி தரும் கருவேல மரங்களை நாம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஆனால் அதன் வேர் செய்யும் வேலைகளை நாம் அறிந்திருப்பதில்லை. எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாழவிடாமல் பார்த்துக்கொள்கிறது. அடுத்தவர் உயிரை உறிஞ்சி வாழ்பவர்களை சுயநலக்காரர்கள் என நாம் அழைக்கிறோம். நமது நீரை உறிஞ்சி வாழ்ந்து, நமக்கே உலை வைக்கும் இந்த கருவேல மரங்களை என்னவென்று அழைப்பது? நிலத்தடி நீரை முடிந்த வரை "சுவாகா' செய்வதால், பூமி தானாகவே வறண்டு விடுகிறது. இதை அறியாத நாம் வருணபகவான் மீது பழியை போட்டு, பகைத்து வருகிறோம். கருவேல மரத்தின் இந்த கொடூரம், தமிழகத்தில் இங்கு தான் அதிகம் அரங்கேறி வருகிறது.

காற்றையும் விட்டுவைக்கவில்லை! நிலத்தடி நீரை பால்படுத்தும் கருவேலமரங்களின் தாகம் அத்துடன் நிறைவடைவதில்லை. தன்னை சுற்றி தழுவி வரும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் வறட்சி என்பது தவிர்க்க முடியாததாகவும், நிலையானதாகவும் மாறிவிடுகிறது. தென் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் கருவேல மரங்களால் அபகரிக்கப்படுவது அதிக அளவில் உள்ளது. இதை அறியாமல் கருவேல மரங்களை நாமே வளர்த்து வருகிறோம் என்பது தான் வேதனையிலும், வேதனை. நிலம், நீர் வரிசையில் கருவேல மரங்கள் காற்றையும் விட்டு வைக்கவில்லை. பஞ்சபூதங்களையும் ஏதாவது ஒரு வகையில் பதம் பார்த்து வரும் கருவேல மரங்களுக்கு முடிவு கட்டும் நாள் விரைவில் வரவேண்டும். நம்நாட்டின் மண்ணின் தன்மையை பாதிக்க, வெளிநாட்டினர் தூவிய விதையே இந்த கருவேல மரங்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதை உறுதி செய்யும் விதமாகவே கருவேல மரங்களின் செயல்பாடுகள் உள்ளன. உலகில் வேறு எங்கும் இந்த அளவு கருவேல மரங்கள் இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் ராமநாதபுரத்தில் காணப்படுவதை போல வேறு எங்கும், இத்தனை மரங்கள் தென்பாடாது.

"வளர்ப்போம்' கோஷத்தில் மாற்றம்! உலகம் ஒட்டுமொத்தமாக வெப்பமயமாகி வரும் நிலையில், அதை தடுக்க மரங்களை வளர்க்க அரசு மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி உலகம் முழுவதும் மரங்களை வளர்க்க கோஷங்கள் எழுப்பபடுகிறது. இந்த நேரத்தில் கருவேல மரங்களை மட்டும் அழியுங்கள் என்று சொல்ல வேண்டிய கட்டாயமும் நேர்ந்துள்ளது. மரங்களுக்குரிய தன்மையை களங்கப்படுத்தும் இந்த கருவேல மரங்களால், புவியில் ஜீவராசிகள் சந்திக்கப்போகும் பிரச்னைகள் நிறைய உள்ளது. "மரம் நட விருப்பமில்லை,' என, நினைப்பவர்கள், நீங்கள் என்றால், கருவேல மரங்களை அழிப்பதற்காவது முன்வாருங்கள். இம்மாவட்டத்தில் மரம் நடுவது அவசியம் என்றாலும், அதே அளவுக்கு கருவேல மரங்களை அகற்ற வேண்டியதும் அவசியமாகும். அந்த வகையில் "மரங்களை வளர்ப்போம்' கோஷத்தில், "கருவேல மரங்களை அகற்றுவோம்,' என்ற, கோஷமும் இணைக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டில் "கெட் அவுட்': உலக ஆட்சி, அரசியலில் முத்திரை பதித்து வரும் அமெரிக்காவில், கருவேல மரங்களை வளர்க்கவிடுவதில்லை. அங்குள்ள தாவிரவியல் பூங்காக்களில் நச்சுத்தன்மை உள்ள மரங்கள் குறித்த பட்டியல் குறிப்பிடப்பட்டிருக்கும், அதில் முதலிடம் நம்ம ஊர் கருவேல மரங்களுக்கு என்பதை நாம் இந்த நேரத்தில் அறிய வேண்டும். அமெரிக்கர்களை போல வாழ நினைப்பது மட்டும் போதாது, அவர்களின் செயலையும் கடைபிடிக்கலாமே. இங்கோ ரோட்டின் இருபுறத்திலும் கருவேல மரங்கள், வீட்டின் வேலிகளாக கருவேல மரங்கள், என, முழு புழக்கத்தில் உள்ளனர். வெளிநாடுகளில் "கெட் அவுட்' சொல்லப்பட்ட, கருவேல மரங்களுக்கு இங்கு "வெல்கம்' கூறி, நமக்கு நாமே வேட்டு வைக்கிறோம்.

கேரள குளுமைக்கு காரணம் என்ன? ராமநாதபுரம் மாவட்டவாசிகள் கோடை சுற்றுலாவுக்கு கொடைக்கானல், கேரளாவுக்கு செல்வது வழக்கம். காரணம் அவையெல்லாம் இங்குள்ளவர்கள் பார்க்க முடியாத குளிர்ந்த பிரதேசங்கள். கேரளாவை எடுத்துக்கொண்டால், கருவேல மரங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் முழுமையாக பரப்பிய மாநிலமாகும். இதனால் அங்கு கருவேல மரங்களை காணமுடியாது. இங்குள்ள கருவேல மரங்களை அகற்றினால், நமது மாவட்டமும் கேரளவின் பொலிவுக்கு திரும்பும். கடலோர மாவட்டமாக ராமநாதபுரம் இருந்தும், போதிய மழைப்பொழிவு இல்லை என்றால், அதற்கு காரணம் கருவேல மரங்களின் தலையீடே ஆகும்.

காசு செய்யும் வேலை: உதாசீணப்படுத்தப்பட்ட கருவேல மரங்களின் விறகுகள், விற்பனையில் நல்ல லாபத்தை தருகின்றன. இதை கருத்தில் கொண்டு பலரும் கருவேல மரங்களை வளர்க்க தொடங்கிவிட்டனர். அதற்கு ஏற்ப சூழல் இங்கு தாமாகவே அமைந்துவிட்டதால், விவசாயிகள் பலரும் கருவேல மரங்களை விரும்புகின்றனர். எந்த செலவும் இல்லாமல், எளிதில் லாபம் கிடைக்கும் வியாபாரமாக கருவேல மரங்கள் மாறிவிட்டன. லாபத்தை கணக்கிடுபவர்களுக்கு அதன் பின்னணியில் உள்ள சோகத்தை அறிவதில்லை. கரி மூட்டம் போட்டு மேலும் புகையை கிளப்பி, காற்றை மாசுபடுத்துகின்றனர். இருந்தும் கெடுத்தது போதா தென்று, இறந்தும் காற்றை மாசுபடுத்தும் வேலையை கருவேல மரம் தெளிவாக செய்கிறது. பணத்தின் மீதுள்ள மோகத்தில் நம்மவர்களும், கருவேல மரங்களை நம்பி விவசாயத்தை கைவிட்டனர். இன்று பல விளைநிலங்களில் கருவேல மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆண்டு கணக்கில் வளரச்செய்து, அறுவடைக்கு காத்திருக்கும் பக்குவத்திற்கு இங்குள்ளவர்கள் பழகிவிட்டனர். ­­­

வளம் காண அணுகுங்கள் வனத்துறையை...: தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலையில் கிடைக்கும் இந்த மரக்கன்றுகளை, அவர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி வளர்த்தால் நிச்சயம் இப்பகுதி பசுமையாக மாறும். ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வகையில் வளரும் தன்மையுடைய மரங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்டோர், தங்கள் பகுதியின் வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தேவையான மரக்கன்றுகளை வாங்கி பயன்பெறலாம். பிற மாவட்டங்களில் எத்தனையோ பேர் இத்திட்டத்தை பின்பற்றி, மரங்களை வளர்த்து வருகின்றனர். நம்மாவட்டத்தில் இது பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது. இனியாவது பிரயோஜனம் உள்ள மரங்களை தேர்வு செய்து நட, மாவட்டவாசிகளும், விவசாயிகளும் முன்வர வேண்டும்.

கருவேல மரங்கள் சார்ந்த தொழிலுக்கு தேவை தடை: மாவட்டத்தில் கருவேல மரங்கள் சார்ந்த பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. இவை நாம் பெருமைப்பட வேண்டிய விசயம் அல்ல. விறகு கரி, விறகு, வேர் கட்டை, தூர் கட்டை, வேலி கம்புகள் என கருவேல மரங்களின் பாகங்களை பிரித்து மேய்ந்து விற்பனை செய்கின்றனர். தனிநபர் லாபத்திற்காக ஒட்டு மொத்த மாவட்டமே பழியாவதை தடுக்க வேண்டும். அதற்காக இது போன்ற கருவேல மரங்களை சார்ந்த தொழிலுக்கு மாவட்டத்தில் அனுமதி மறுக்க வேண்டும். இரும்பு கரம் கொண்ட தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பிக்க வேண்டும். உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் இது போன்ற தொழிலை ஊக்கப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து வந்து, இங்கு முகாமிட்டு, மாவட்டத்தின் வறட்சிக்கு வழிகாட்டும் விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். வெப்பமயமாவதால் குறிப்பிட்ட ஆண்டுகளில் உலகம் பெரிய இழப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். ராமநாதபுரத்தின் தற்போதைய நிலையை பார்க்கும் போது, முன்கூட்டியே இங்கு பாதிப்புகள் வரலாம், என்பதால், இங்கு இது போன்ற கெடுபிடிகள் தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் குரல் இல்லை...: வறட்சி, பின்தங்கி மாவட்டம் என தெரிவிக்கும் மக்கள் பிரதிநிதிகள், எதனால் இந்நிலையில் உள்ளது என்பதை அரசுக்கு தெரிவிப்பதில்லை. முழுக்க கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ள இம்மாவட்டத்தை, சீரமைக்க எந்த குரலும் தரவில்லை. மாறாக கண்மாய்களில் விளைந்த கருவேல மரங்களை ஏலம் எடுப்பது, எடுத்து தருவதில் தான் மக்கள் பிரதிநிதிகளுக்கு நாட்டம் செல்கிறது. இன்னும் சொல்லப்போனால் மாவட்டத்தில் கருவேல மரங்கள் வளர்வதை தான் மக்கள் பிரதிநிதிகள் விரும்புகின்றனர். நம்மை நாமே காக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், பொதுமக்களே இவற்றை ஒழிக்க முன்வர வேண்டும்.

விவசாயிகள் சொல்வதென்ன...

ஸ்ரீதர்(உத்தரகோசமங்கை): கீழக்கரை, திருப்புல்லாணி உள்ள அதிகமான கருவேல மரங்களால், விவசாயிகள் கரிமூட்டம் போடும் தொழிலுக்கு மாறி விட்டனர். இவற்றின் வேர் பூமியின் கடைசி பகுதி வரை செல்வதால் நிலங்கள் கடுமையான வெப்பத்தை சந்திக்கிறது. நிலத்தடி நீரை காப்பாற்ற கருவேல மரங்களை ஒழிக்க வேண்டியது அவசியம்.

சேக்அப்துல்காதர்(எஸ்.பி.பட்டினம்): திருவாடானை தாலுகாவின் கடற்கரை பகுதிகளில் கருவேல மரங்கள் அதிகமாக உள்ளன. இதை சமூக விரோதிகள் பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளனர். கருவேல மரங்களை அப்புறப்படுத்திவிட்டு நல்ல மரங்களை நடுவு செய்தால், அதன் பலனை எதிர்கால சந்ததியினர் அனுபவிக்கலாம்.

சுகுமாறன்(பரமக்குடி): கருவேல மரங்களால் காற்று மாசுபடுகிறது. இதைதடுக்க கருவேல மரங்களை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமயமாகி வருவதை தடுக்கவும், ராமநாதபுரத்தை வறட்சியிலிருந்து மீட்கவும் கருவேலமரங்கள் ஒழிப்பு கோஷம் ஓங்க வேண்டும்.

ராசு(கமுதி): கருவேலமரங்களால் வெயில்காலத்தில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு ஏற்படுகிறது. கருவேல மரங்களை வெட்டி எத்தனையோ பேர் பிழைப்பு நடத்துகின்றனர். இருந்தாலும் , இதை அழித்தால் விவசாயம் கைகொடுக்கும் என்பதால் பாதிப்பு வராது.

திருநாவுக்கரசு (எஸ். எம். இலந்தைக்குளம், கடலாடி): மித மழையில் விளையும் மிளகாய், குறுகியகால பயிரான தக்காளி, கத்தரிக்காய் போன்றவையும் கருவேல மரங்களால் பாதித்துவிட்டது. இவற்றை அகற்றவில்லை என்றால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் விவசாயிகள் இடம் பெயருவதை தவிர வேறுவழியில்லை.

அழிக்க வேண்டியது அவசியம்...: மாவட்டத்தில் மக்கள் தொகையை விட அதிகமாக காணப்படும் கருவேல மரங்களை அகற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகிவிட்டது. "அரசு நிலம், தனியார் பட்டா நிலத்தில் விளைந்துள்ளது,' என, உரிமை கொண்டாட, இவை ஒன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய வஸ்து இல்லை. பாரபட்சமில்லாமல் அழிக்கப்பட வேண்டிய விஷ ஜந்தாகும். வெட்டினால் தழைக்கும் தன்மை கொண்ட இவற்றை, வேருடன் அழிக்க வேண்டும். இதற்காக அரசு தரப்பில் சிறப்பு நிதி ஒதுக்கி, இயந்திரங்கள் மூலம் துரிதமாக பணி நடக்க வேண்டும். எதிர்ப்புகளுக்கு இதில் இடம் கொடுக்க கூடாது. மாவட்டத்தில் தற்போதுள்ள கருவேல மரங்களில் 50 சதவீதத்தை ஒழித்தால் கூட, வறட்சியின் பிடியில் மாவட்ட மீள்வதை ஓரிரு ஆண்டில் நாம் உணரலாம். முழுமையாக ஒழித்து கட்டினால், கடலோர மாவட்டத்தின் பயனான, மழைபொழிவை நாம் ஆண்டுதோறும் அனுபவிக்கலாம். தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள், தனியார் கிளப்புகள் போன்றவையும் இந்த விசயத்தில் முழுஈடுபட்டுடன் செயல்பட வேண்டும். அப்போது தான், வறண்டு வரும் ராமநாதபுரத்தின் நிலையை மாற்ற முடியும்.